வார்ப்புரு பேச்சு:=பிரா=
- ஒரு கொடியுடைய இவ்வார்ப்புரு அழகாக இருக்கிறது. முதல் 10இடங்களிலுள்ள விக்சனரிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அளவு,ஈர்ப்பு,.. போன்றவை நன்கு உள்ளது. இதனை விக்கிநிரலுக்குள் அமைத்தால், இது போன்ற ஒரு கொடியுள்ள வார்ப்புரு தலைச்சிறந்ததாக விளங்கும். என்னைப் போன்ற குறைந்த இணைப்பில் பங்களிக்கும் பங்களிப்பாளருக்கும் பக்கத்தோற்றம் விரைவில் வருகிறது.
- மாறாக இந்தி போன்ற மொழியைக் குறிக்கும் வார்ப்புரு தோன்றும் போது, படங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றுகிறது. சில நேரங்களில் படங்கள் அனைத்தும் முழுமையாகத் தோன்றுவதில்லை.
- இந்த வார்ப்புருக்கு அடுத்து வரும் வரிகள் ஒட்டிவரின் இன்னும் முழுமையானச் சிறப்பைப் பெறும்.--த*உழவன் 03:21, 10 செப்டெம்பர் 2010 (UTC)
எனக்கும் ஒரு கொடியுடன் வருவதே அழகாகத் தெரிகின்றது.அப்படியே மிஞ்சிப் போனாலும் 2-3 உக்கு மிகாமல் இருந்தால் அழகாக இருக்கும். இது மொழியைக் குறிக்கவும், மொழிப்பட்டையில் மொழியின் பெயர் சற்று விலகி நின்று அறிவிக்கவும் ஏதுவாக இருக்குமாறு அமைத்தது மட்டுமல்லாமல், சிறியதாக கொடியின் நிறம் தெரிவது ஒரு வகையான ஈர்ப்பும் உண்டாக்கி பக்கத்துக்குச் சிறிது அழகும் சேர்க்கின்றது. தமிழ் தவிர்த்த இந்தி முதலான மற்ற எல்லா இந்திய மொழிகளுக்கும் ஒரு கொடியோ 2-3 கொடியோ இட்டால் போதும். அல்லது இந்திக்கு இந்தி பேசும் வட இந்தியப் பகுதியை சிவப்பு நிறத்திலோ, பச்சை, நீல நிறத்திலோ ஒரு வரைபடத்தில் தீட்டி அப்படத்தைச் சேர்க்கலாம். ஆங்கிலத்துக்கும், ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய இரண்டு நாட்டுக்கொடிகள் மட்டும் இருந்தால் நன்றாக இருக்கும் (அல்லது கனடாவையும் சேர்த்துக்கொள்ள்லாம்). உச்ச எல்லையாக மூன்று கொடிகளுக்கு மேல் இல்லாமல் இருந்தால் நல்லது. கொரிய மொழிக்கு இரண்டு நாட்டுக்கொடியும் இடுவது அடித்தேவை. இப்படியே தமிழுக்கும், தொன்றுதொட்டு இலங்கையும் தமிழர்களின் தாயகம். தமிழுக்கு இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய மூன்று கொடிகள் இடலாம். இதெல்லாம் பயனர்கள் கூடி முடிவு செய்ய வேண்டியது. மொழிக்கென ஒரு பட்டையும் வார்ப்புருவும் இருந்துவிட்டால், அதனை தக்கவாறு எப்பொழுதும் செப்பம் செய்து கொள்ளலாம். papillon என்னும் பிரான்சியச் சொல் போல நாளடைவில் மிகப்பல பிற மொழிச்சொற்களுக்கும் தமிழில் பொருளும், தக்க படங்களும் அமைத்து வரைய முடிந்தால் சிறப்பாக இருக்கும்.--செல்வா 12:56, 10 செப்டெம்பர் 2010 (UTC)
- செல்வா! //மூன்று கொடிகள் போதும்// என்று இந்த கொடிபட்டை உருவாக்கிய போது குறிப்பிட்டுருந்தீர்கள். எனக்கும் அதில் ஈடுபாடு இருந்ததால் தான், வேறு கொடி அமைப்பினை தந்தேன். பிறகு கருத்துக் கணிப்பு நடந்தது. இருப்பினும், அதனை நான் மறுத்த தற்குக் காரணம், ஆங்கிலத் தனிச்சொல்லில், பிற மொழிகள் அதிகம் சேரும் வாய்ப்பு இருப்பதால், இது போன்ற பன்மொழிச்சொற்களில் பல கொடிகள், பல பட்டைகளைத் தவிர்ப்போம். அமெரிக்கக் கொடி ஒலிப்பில் வர இருப்பதால், அது அங்கும் இரண்டாம் முறையாக வேண்டாமென்று எண்ணுகிறேன். ஆத்திரேலியா, நியூசிலாந்துக் கொடிகளை நீக்கலாம் என்பது எனது கருத்து. எதை வேண்டுமானாலும், வார்ப்புருவில் சேர்க்கலாம் நீக்கலாமென்று என்ற நிலை இருப்பதால் அந்த இரண்டு கொடிகளை நீக்க வேண்டுகிறேன்.படிமம்:Flags ta.wiki.PNG என்பது குறைந்த இணைய வேகத்தில் தெரிவதைக் கவனியுங்கள். நன்றி.
- தொகு வசதி வரும் படி இப்பட்டையில் விரைவில் கொண்டுவர முயலுகிறேன். முறையாக க் கணினியியல் கற்காததால், தேவையானதைக் கற்றுக்கொள்ளத் தாமதமாகிறது. எனது அம்முயற்சியை, வார்ப்புரு:esv காணலாம்.
- இதுபோன்ற கொடிப்பட்டையும் அதற்கு அடுத்துவரும் வரிகளும் ஒட்டி இருப்பது போல, இரண்டொரு நாட்களில் செய்வேன்.
- கொரிய வடிவம் இருப்பதிலேயே தலைச்சிறந்தது. அதே போல fr:dado என்பதிலுள்ள ஒலிப்புக்கான அமைப்பும் இணைத்தால் நம் தளம் மிக நன்றாக இருக்கும். இரசிய விக்சனரியர் சமக்குறியீடுகளைச்(விக்கிநிரலைச்) செவ்வனேப் பயன்படுத்துகின்றனர். நான் நிரலன் அல்ல என்பதால், அவற்றிற்காக ஏங்கியே இருக்கிறேன். என்றாவது அதனையும் இங்கு கொண்டு வருவேன். --த*உழவன் 01:28, 11 செப்டெம்பர் 2010 (UTC)
பெல்சியம்
தொகுபெல்சிய நாட்டிலும் கனடாவிலும் பிரான்சியம் ஓர் ஏற்புபெற்ற அலுவல் மொழி என்பதால் ஒரு பயனர் (பயனர்:Fr.ta)பெல்சியக்கொடியையும், கனடா நாட்டுக்கொடியையும் இணைத்துள்ளார். பல நாடுகளிலும் ஏற்புபெற்ற அலுவல் மொழியாக இருந்தாலும், ஒரு 2-3 நாடுகளின் கொடிகள் இருந்தால் போதும். பெல்சியம் என்று நாம் தமிழ் முறைப்படி எழுதுவதில் தவறு இல்லை. பிரான்சு நாட்டினர், பிரான்சியத்தில் Belgique (பெ3ல்ழ்சீக் என்பது போலவும், இடாய்ச்சு மொழியர் Belgien (பெ3ல்கியன் என்பது போலவும்) எசுப்பானியர் Bélgica (பெ3ல்ஃகிக்கா என்பது போலவும்) ஒலிக்கின்றார்கள். நாம் பெல்சியம் (pelsium) என்பது போல ஒலித்தால் ஏதும் பெரிய குற்றம் இல்லை. (பெ3 = Be, மெல்லொலி பகரம் ப3 = ba) --செல்வா 20:17, 22 மே 2011 (UTC)