வார்ப்புரு பேச்சு:இந்திபலுகுறிஒலி
ஒலிப்பை எழுத்து வடிவில் குறிப்பது வேறு, அதனை ஒலி வடிவில் தருவது வேறு. ஒலிப்பு என்னும் பட்டை, ஒலிப்பைப் பற்றியன அடங்கும் பொது உள்பகுப்பு என்று பிரித்துக்காட்ட. அருள்கூர்ந்து அதனை மீண்டும் இட வேண்டுகிறேன்.--செல்வா 18:10, 7 மார்ச் 2010 (UTC)
- த.உழவன், அண்மையில் நீங்கள் செய்த மாற்றத்தால், பல ஒலிப்புகள் (எழுத்துவடிவாகக் கொடுத்திருந்தவை) இல்லாமல் போய் இருப்பதைப் பாருங்கள். --செல்வா 18:18, 7 மார்ச் 2010 (UTC)
- உடன் அறிவித்தமைக்கு நன்றி. மற்றொரு ஒலிப்பு என்பதை பலுக்கல் அல்லது சொல்லொலி அல்லது உச்சரிப்பு என்று மாற்றலாமென்று நினைக்கிறேன். ஏனெனில், வந்த சொல்லே திரும்பதிரும்ப வருவது பொருத்தமாகப் படவில்லை. உங்களின் கருத்தென்ன?த*உழவன் 18:24, 7 மார்ச் 2010 (UTC)
ஒலிப்பு, பலுக்கல் என இரண்டுள்ளன. இவை தவிர சொற்றிருத்தம் என்றும் மொழியோசை என்றும் வேறு இரண்டு சொற்களும் திருத்தமான சொல்லொலிப்புக்கு உள்ளன. மொழிதல் என்றாலே திருத்தமாகச் சொல்லுதல் என்று பொருள், எனவே மொழிப்பு என்றும் சொல்லலாம். மேலும் ஒலிப்பைப் பொருத்த அளவிலே, கீழ்க்காணுமாறு இருக்கலாம் என்பது என் கருத்து (இதில் நீங்கள் இணைத்திருக்கும் ஒலிப்பு என்னும் இளம்பச்சைக் கட்டம் இல்லாமல் இருந்தால் நல்லது):
கூடவே பொருள் என்னும் வரிப்பட்டையையும் இவ் வார்ப்புருவிலேயே சேர்த்திருக்கின்றீர்கள் அப்படி இல்லாமல் இருப்பதும் நல்லது. பிரித்துப் பொருத்துமாறு தனித்தனியாக இருப்பது நல்லது (மாடுலர் டிசைன்). சேர்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினால், அவற்றைப் பிணைத்து இன்னொரு வார்ப்புரு செய்யலாம். இதனால் வேண்டியவாறு மாற்றிக்கொள்ள வசதியாக இருக்கும்.
தனி முழுவரிப் பட்டையாக இருப்பது, ஒரு பக்கத்தில் உள்பகுப்புபோல இருக்கும். ஒலிப்பு என்னும் வரிப்பட்டை, அதன்கீழ் வருவது ஒலிப்பு/பலுக்கல்/மொழிப்பு/சொற்றிருத்தம் பற்றியது என்று தெளிவாகக் காட்டும். அதன் கீழ் அதனைப்பற்றிய எழுத்துவழி விளக்கம், ஒலிக்கோப்பு ஆகியவற்றைக் குறிக்கலாம். அதே போல பொருள் என்னும் வரிப்பட்டைக்குக் கீழ் பொருள்களைத் தரலாம். இப்பட்டைகள் இப்பொழுது இருப்பது போல வெளிர் நீல நிறத்தில், கண்ணை உறுத்தாத வகையில் இருப்பது நல்லது. ஒவ்வொரு பட்டையும் ஒவ்வொரு நிறத்திலும் இல்லாமலும், ஒரே சீராக இருப்பதும் நல்லது. அப்படியே நிறத்தை மாற்றினாலும் 2 வெவ்வேறு நிறங்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது. இவையெல்லாம் என் தனிப்பட்ட கருத்து என்றாலும், உயர் மதிப்புள்ள பல நூல்களிலும் வலைத்தளங்களிலும் கண்ட உணர்வால் எழுதுகிறேன். அடிக்க வரும் பச்சையும் சிவப்புமாக ஏன் இருக்கலாகாது, ஏன் எம்பி எம்பிக் குதிக்கும் "கண்ணைக் கவரும்" அசைபடங்கள் இருக்ககூடாது என்றும் கூறுவது கடினம். அழகுணர்வு என்பது தனிமாந்தர்களின் நுண்துய்ப்பு. ஓர் அறையில் வெளிச்சம் தர வைக்கும் விளக்கு கூட மறைவாக, வெளிச்சம் கசிந்து பரவுமாறும் அமைப்பதும் அறை அழகமைப்பாளர்கள் கைக்கொள்ளும் அழகுசேர் வழிகளில் ஒன்று. இவற்றைச் செய்து காட்டி கருத்தறிய வேண்டும் என்று எண்ணினாலும், நேரம் போதாமையால் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கின்றேன். --செல்வா 18:54, 8 மார்ச் 2010 (UTC)
தமிழ் விக்சனரி, பிற விக்சனரியை விட ஒருபடி மேலிருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். அதனால் சில முயற்சிகளைச் செய்கிறேன். இதுவரை யாரும் செய்யாததால் நான் செய்கிறேன். அனுபவமின்மையால் தவறுகள் வருகின்றன.
//நேரம் போதாமையால் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கின்றேன்// உங்கள் அனுபவத்தினால் சொற்கட்டமைப்பை, விரைவில் செய்து முடிக்க முடியுமென நம்புகிறேன். அது முடிந்தால் ஒரு நாளைக்கு என்னால் 100க்கும் மேல், புதியப் பதிவுகளைச் செய்ய முடியும். சொற்கட்டமைப்புகளின் முடிவு நோக்கிக் காத்திருக்கிறேன்.
தற்போது உள்ள ஒலிப்பு என்பது (பொருள் போல, அந்த வரி முழுவதும் வண்ணம் கொண்டிருக்காமல்) கீழுள்ள மாற்றங்களைக் காட்டு என்ற தத்தல் அளவு இருந்தால் நன்றாக இருக்குமென நினைககிறேன். அதை எப்படி செய்வது?த*உழவன் 14:08, 9 மார்ச் 2010 (UTC)
Start a discussion about வார்ப்புரு:இந்திபலுகுறிஒலி
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வார்ப்புரு:இந்திபலுகுறிஒலி.