வார்ப்புரு பேச்சு:புது ஆங்கில பெயர்ச்சொல்

பலுக்கல் என்ற சொல்லிற்குப் பதில் உச்சரிப்பு என்று மாற்றலாமா? --Omanickam 21:00, 18 ஆகஸ்ட் 2006 (UTC)

பலுக்கல் என்பது user:C.R.Selvakumar எனக்கு அறிமுகப்படுத்திய நல்ல தமிழ்ச்சொல். அதனால் அதைப் பயன்படுத்தலாம் என நினைத்தேன். இச்சொல் குறித்த மேற்படி விவரங்களை பதியச் சொல்லி அவரைக் கேட்கிறேன்--ரவி 22:01, 18 ஆகஸ்ட் 2006 (UTC)

இவ்வார்ப்புருவிலும் தொடர்புடைய பிற வார்ப்புருக்களிலும் [[பகுப்பு:பெயர்ச்சொல்]] போன்ற பகுப்புக்களை இணைக்கலாமா?

உடன்பாடென்றால் பின்வரும் நிரல்துண்டை வார்ப்புருவில் இணைத்துவிடுங்கள். -- Sundar 12:35, 8 செப்டெம்பர் 2006 (UTC) <includeonly> [[பகுப்பு:பெயர்ச்சொல்]] </includeonly>Reply

சுந்தர், இது போன்ற பல பகுப்புகளை ஆங்கில விக்சனரியில் செய்கிறார்கள். ஆனால், இதனால் பெரிய பயன் ஏதும் உண்டா என்று புரியவில்லை. விக்கிபீடியாவில் கட்டுரைத் தலைப்பு தெளிவாக அறியாதவர்களுக்கு பகுப்புகள் உதவியாக இருக்கும். ஆனால், குறிப்பிட்ட சொல் தேடி வருபவர்கள் தாராளமாக தேடல் பெட்டியில் இட்டு தேடிவிடலாமே? தவிர பெயர்ச்சொல், உரிச்சொல், வினைச்சொல் ஆகிய மூன்று பெரிய பகுப்புகளுக்குள் சொற்களை அடக்குவதால் என்ன நன்மை? மொழி வாரியாக கூட, சொற்களை பகுப்பது அவசியமற்றதாகத் தோன்றுகிறது.!!--ரவி 13:02, 8 செப்டெம்பர் 2006 (UTC)Reply

ஆம், ரவி. மனிதப் பயனர்களுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லைதான். ஒருவேளை பின்னாளில் தானியங்கிகளுக்கு இவை பயன் தர வாய்ப்புண்டு. தவிர, கூடுதல் முயற்சியின்றி இவற்றை வார்ப்புருவில் இணைக்க முடியும் என்பதால்தான் பரிந்துரைத்தேன். -- Sundar 09:34, 11 செப்டெம்பர் 2006 (UTC)Reply
Return to "புது ஆங்கில பெயர்ச்சொல்" page.