விக்சனரி:கொள்கைகளும் வழிகாட்டல்களும்

விக்சனரி நிறுவுநர், பங்களிப்பாளர்களும் ஒரு பொது இலக்கைக் கொண்ட ஒரு கூட்டு முயற்சியாகும்.

விக்சனரி கொள்கைகளும் வழிகாட்டல்களும் அப்பொது இலக்குகளை அடைவதற்கு உதவுமுகமாக எழுதப்பட்டுள்ளது. இக்கொள்கைகளும் வழிகாட்டல்களும் தொடர்ந்து கூறுவதோடு நீங்களும் இதற்கு உதவலாம்.

முக்கிய கொள்கைகள்

தொகு

விக்சனரியில் பங்களிக்க முன்னதாக எல்லாக் கொள்கைகளையும் படித்திருக்க தேவையில்லை. எனினும் பின்வரும் கொள்கைகள் விக்சனரியில் உங்கள் பங்களிப்பைப் பயனுள்ளதாக ஆக்கும்.

  1. விக்சனரி ஓர் அகரமுதலியாகும்.
  2. விக்சனரி ஒரு பன்மொழித் திட்டமாகும். இங்கு எந்தவொரு மொழிச் சொற்களையும் இணைக்கலாம். இந்த விக்சனரி தமிழ் விக்சனரியாகும். இங்கு ஏனைய மொழிச் சொற்களுக்கு விளக்கங்கள் தமிழில் எழுதப்பட வேண்டும். ஏனைய மொழி விக்சனரிகள் அவ்வம் மொழிகளில் இச்சொற்களுக்கு விளக்கங்களை அளிக்கும்.
  3. பதிப்புரிமைகளை மதிக்கவும். விக்சனரி க்னூ தளையறு ஆவண உரிமத்தின் கீழ் வழங்கப்படும் ஒரு கட்டற்ற அகரமுதலியாகும். காப்புரிமைக்கு உட்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களை இங்கே வழங்குவதன் மூலம் உண்மையான கட்டற்ற அகரமுதலியை ஆக்கும் எமது நோக்கத்துக்கு இடையூறு விளைகிறது. மேலதிக விவரஙகளுக்கு விக்சனரியின் பதிப்புரிமைப் பக்கத்தைப் பார்க்கவும்.
  4. பக்கச் சார்பைத் தவிர்க்கவும். விக்சனரி உள்ளடக்கங்கள் நடுநிலை நோக்குடன் எழுதப்பட வேண்டும்.
  5. ஏனைய பங்களிப்பாளர்களை மதிக்கவும். விக்சனரி பங்களிப்பாளர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து மாறுபட்ட பண்பாட்டும் பின்னணிகளிலிருந்து வருபவர்களாக இருப்பதால் அவர்களின் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் வேறுபட்டவையாக இருக்கும். ஏனைய பங்களிப்பாளர்களை மதித்து அவர்களது கருத்துக்களுக்கு இடமளிப்பதே இக்கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும்.