விக்சனரி பேச்சு:தானியங்கிகள்

தானுலவி தொகு

தானுலவியைப் (AWB) பயன்படுத்துவதற்கும் இங்கு உரையாடி அனுமதி பெற்றுச் செயல்படுத்தும் முறையைப் பின்பற்றினால் நல்லது. அப்போதுதான், பதிவேற்றம் சீராகவும் ஒரே நடையுடனும் இருக்கும் என நினைக்கிறேன். -- Sundar 04:48, 25 செப்டெம்பர் 2011 (UTC)Reply

ஆலமரத்தடியில் பதிவான இவைகள், கீழ்கண்ட அறிவிப்புக்கு பிறகு, இங்கு மாற்றப்பட்டது.--தகவலுழவன்
 ஆலமரத்தடியிலிருந்து ( தானியங்கிக் கணக்குக்கு விண்ணப்பம் என்பதன் உரையாடல்களை, 10 (4.நவம்பர்.2011 )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப்.)

தானியங்கிக் கணக்குக்கு விண்ணப்பம் தொகு

தமிழ் விக்சனரியின் அதிகாரிகளுக்கும், நிர்வாகிகளுக்கும், நான் சில தினங்களாக தானியங்கியை பயன்படுத்தி பதிவிடுகிறேன். திரு. தகவல் உழவன் அவர்கள் அதற்கு என தனிக் கணக்கை உருவாக்க வேண்டும் என்று கூறியதினால், நான் அவ்வாறான கணக்கு ஒன்றை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இராஜ்குமார் 04:27, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Bot/தானியங்கி அனுமதி தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்:
  • நோக்கம்:
  • உரிமையாளர்:
  • சோதனைப்பதிவுகள்:
  • மேலாளர் முடிவு:

inbambot தானியங்கி அனுமதி தொகு

தமிழ் விக்சனியில் நான் த.இ.ப வணிகவியல் கலைச் சொற்கள் மற்றும் நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி சொற்களை சேர்த்து வருகிறேன். அதற்கென inbambot என்ற ஒரு தானியங்கி தேவை.

BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:Inbambot
நோக்கம்: த.இ.ப வணிகவியல் கலைச் சொற்கள் மற்றும் நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி சொற்களை சேர்க்க.
உரிமையாளர்: User:Inbamkumar86
சோதனைப்பதிவுகள்: 1., 2.
மேலாளர் முடிவு:

--இராஜ்குமார் 09:21, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் இராஜ்குமார். தமிழ் விக்சனரியில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி பதிவேற்றம் குறித்து விக்சனரியில் வேறு பல இடங்களிலும் நடந்துள்ள உரையாடல்களைக் கவனித்தேன். சில கருத்துகள்:

  • தமிழ் விக்சனரியில் தமிழ் உட்பட எல்லா மொழிச் சொற்களுக்கும் தமிழில் விளக்கம் தர வேண்டும். தமிழில் மட்டும் விளக்கம் தந்தால் போதும். ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு தந்தால் பயனுள்ளதாக இருக்கும் தான். ஆனால், வற்புறுத்த முடியாது. ஏனெனில், எல்லா தமிழ்ச் சொற்களுக்கும் நல்ல ஆங்கில மொழிபெயர்ப்பு இட தேர்ந்த மொழியாளர்களாலேயே முடியும். தவிர, தமிழ் மொழிச் சொற்களுக்கான ஆங்கில விளக்கங்களை ஆங்கில விக்சனரியில் இடுவதே சரியாக இருக்கும். இதன் மூலம் பல்வேறு மொழியினரும் ஒரே இடத்தில் அவற்றைப் பார்த்துப் பயன்பெற முடியும். தமிழ் அறியாத தமிழர்கள் ஆங்கிலம் மூலம் தமிழ் கற்க விரும்பினால் அதற்கான சரியான இடம் ஆங்கில விக்சனரியாகவே இருக்க முடியும்.
  • தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலத்தில் ஒலிப்பு எழுதிக் காட்டத் தேவை இல்லை.
  • பிற மொழி விக்சனரிகளின் வளர்ச்சிகளுடனான ஒப்பீடு, மேல் விக்கி தரவு கணக்கிடும் முறையின் அடிப்படையிலான செயல்பாடுகளை விட, நாம் உருவாக்கும் ஒவ்வொரு பக்கமும் தன்னளவில் பயனுள்ளதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அகம்மியர், அநந்நியை ஆகிய இரண்டு மாதிரிச் சொற்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருள் எனக்குப் புரியவில்லை. ஏற்கனவே இவை ஒரு அகரமுதலியில் உள்ளவை தான் என்றாலும், இது போல் நூற்றுக் கணக்கில் சொற்களைப் பதிவேற்றுவதில் பயனில்லை. எனவே, ஒவ்வொரு பக்கத்திலும் பயனர்களுக்குப் புரியும் வகையில் பொருள் விளக்கம், எடுத்துக்காட்டுகள், உசாத்துண்டைகள் தருவது நன்று. ஏற்கனவே சிலர் சுட்டியபடி பல பகுதியாக இந்தப் பதிவேற்றத்தைப் பிரித்து முதலில் பதிவேற்றியவற்றை மேம்படுத்தி பிறகு மற்றவற்றைப் பதிவேற்றத் தொடரலாம்.
  • அகம்மியர், அநந்நியை ஆகிய இரண்டு மாதிரிச் சொற்களும் இரண்டு வார்ப்புருகளில் உள்ளன. எந்த வடிவத்தை இறுதி செய்யப்போகிறோம்? இன்னும் எப்படி மேபம்படுத்துவது? ஆதாரங்கள் பகுதியில் உள்ள சென்னைப் பேரகரமுதலி, வின்சுலோ அகரமுதலி ஆகியவற்றில் ஒரு சொல் இல்லாத போது அவற்றைக் காட்டாமல் விடுவதே நல்லது. இல்லாத பக்கங்களுக்கு இணைப்பு தருவது பயனர்களை அயரச் செய்யும்.
  • ஏற்கனவே த.இ.ப கலைச்சொற்களை நிறைய ஏற்றி இருக்கிறோம். அவற்றில் வணிகவியல் சொற்கள் இன்னும் இடம் பெறவில்லையா?

நூற்றுக்கும் மேற்பட்ட சொற்களைப் பதிவேற்றும் போது, சரியான திட்டமிடலும் விக்சனரி சமூகத்தின் ஒருங்கிணைந்த செயற்பாடும் மிக அவசியம். எனவே, இது குறித்து மேலும் உரையாடிச் செயற்பட வேண்டுகிறேன். நன்றி--ரவி 04:07, 24 செப்டெம்பர் 2011 (UTC)Reply

நன்றி ரவி. ஆங்கில ஒலிப்பி தேவையில்லை என்பதுதான் என் கருத்தும். பின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை பெரிய விடையமாக பாவிக்க தேவையில்லை என்பது தான் என்கருத்து. அதிகாரிகள் நாங்கள் முன்பே இது பற்றி முடிவெடுத்துவிட்டோம் ஆங்கில மொழிப்பெயர்ப்பை சேர்க்க வேண்டும் என்றார்கள். அதன் பிறகு சரி என்றேன். [.[கதிர்வேல்பிள்ளை அகரமுதலி]] என்ற பகுப்பில் உள்ள சொற்கள் அனைத்துமே விரிவு படுத்த வேண்டியதுதான். இப்பகுப்பில் உள்ள சொற்கள் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லாதவை. இச்சொற்களை 99 வீதம் எவரும் பயன்படுத்த மாட்டார்கள். இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும் இதே நிலை தான். எவராவது பழஞ்சொற்களை ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள் தான் இவ்வாறு செய்வார்கள். நீங்கள் சொல்வதைப் போல் விரிவு படுத்தி பதிவேற்றினால் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும். விரைவாக இவ்வாறு பதிவேற்றிவிட்டு மெதுவாக அதனை விரிவுபடுத்தலாம். பக்க வடிவம் எப்படி இருக்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள் எப்படி இருக்க வேண்டும். நான் முதலில் ஆதாரங்களை இடவில்லை. தகவலுழவன் சொல்லியபிறகு தான் ஆதாரங்களை இட்டேன். ஒவ்வொரு சொல்லிற்கும் தனித்தனியாக ஆதாரம் இடுவது தானியங்கியால் எப்படி முடியும்.

மேலும் விக்சனரியில் நிறைய சொற்கள் இருந்தால் தான் ஆராய்வதற்கும், அவற்றை மூலஙகளை அறிந்து மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். இங்கு தமிழ் சொற்கள் குறைவாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கலைசொல்லாகவே இருக்கிறது. பிறருக்கு பயன்படும் படி செய்ய நூறு பேர் வேண்டும். இன்று நாம் ஒரு பொருள் கொடுப்போம். நாளை ஒருவர் அதனை பகுப்பதம் எழுத முயல்வார். அதன் பின் ஒருவர், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை சேர்ப்பார். இப்படிதான் விக்கி வளரும். இப்பொழுதே அனைத்தும் பயன்படும் படி இருக்க வேண்டும் என்றால் எப்படி செய்வது. அவ்வளவு விரைவில் அனைத்தையும் விரிவாக்கதல் சற்று கடினம். ஒரு வாரத்திற்குள் அனைத்து சொற்களையும் பதிவேற்றி விட்டு, பின் பத்து ஆண்டுகளோ, 20 ஆண்டுகளோ விரிவாக்க வேண்டியிருக்கும்.

வணிகவியல் கலைச்சொற்கள் இன்னும் பதிவேற்றவில்லை. நான் தானியங்கி இல்லாமலே கிட்டத்தட்ட 500 சொற்களை பதிவேற்றியுள்ளேன்.--இராஜ்குமார் 07:42, 24 செப்டெம்பர் 2011 (UTC)Reply

நீங்கள பதிவேற்றிய கலைச்சொற்களை பலர் பலமுறை மேலும் மேம்படுத்தினர். நானும். எப்படி அவர்கள் மேம்படுத்தினர். ஏற்கனவே அச்சொல் விக்சனரியில் இருந்ததால் மேம்படுத்தினர். இல்லை என்றால் அச்சொற்கள் இன்னும் பதிவேற்றாமலே இருந்திருக்கும். சொற்கள் விக்சனரியில் இருந்தால் தான் மேம்படுத்த வசதியாக இருக்கும். பதிவேற்றுவதற்கே யோசிக்கிறோம். மேலும் நான் வீட்டில் இருந்து சில நேரம் மேம்படுத்துவேன், அலுவலில் இருந்த போது சில நேரம் பதிவேற்றுவேன். ஒவ்வொரு இடத்திற்கும் சொற்களை எடுத்துக் கொண்டே எப்படி போவது. எங்கு நேரங்கள் கிடைகிறதோ அங்கிருந்து மேம்படுத்த வேண்டும். இல்லையென்றால் பதிவேற்ற பல ஆண்டுகள் ஆகிவிடும். கையில் சொற்களை வைத்துக் கொண்டு எத்தனை நாட்களுக்கு தேடிக்கொண்டே இருப்பது. --இராஜ்குமார் 08:05, 24 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Return to the project page "தானியங்கிகள்".