விக்சனரி பேச்சு:பங்களிப்பாளர் அறிமுகம்

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பங்களிப்பாளர் அறிமுகம் திட்டத்தைப் பின்பற்றி தமிழ் விக்சனரியிலும் இந்த அறிமுக முயற்சியைத் தொடங்கி உள்ளேன். இப்பக்கத்தில் இடம்பெறுவதற்கான இறுக்கமான விதிமுறை ஏதும் இல்லை. சில வழிகாட்டல்களை மட்டும் கீழே குறிப்பிடுகிறேன்:

  • சில மாதங்களாவது தொடர்ந்தும் முனைப்பாகவும் பங்களித்திருக்க வேண்டும். தொகுப்பு எண்ணிக்கை அடிப்படையில் சில நூறு தொகுப்புகளாவது செய்திருக்க வேண்டும்.
  • சொல் சேர்ப்பு தவிர்த்த துப்புரவு, பரப்புரை முயற்சிகள், நுட்ப ஒருங்கிணைப்பு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களையும் அறிமுகப்படுத்தலாம். இது பன்முகப் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்க உதவும்.
  • இரு வாரங்களுக்கு ஒரு பங்களிப்பாளர் என முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்தலாம். அனைத்துக் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்களையும் முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்திய பிறகு, சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு முறை இந்தப் பகுதியை முதற்பக்கத்தில் இணைக்கலாம். முதற்பக்க அறிமுகம் போக, தள அறிவிப்பிலும் சிறு அறிமுகமாக இட்டுப் பங்களிப்புகளைத் தூண்டலாம்.

நன்றி--இரவி 12:32, 14 பெப்ரவரி 2012 (UTC)

Start a discussion about விக்சனரி:பங்களிப்பாளர் அறிமுகம்

Start a discussion
Return to the project page "பங்களிப்பாளர் அறிமுகம்".