விக்சனரி பேச்சு:Firefox and Chickenfoot
- செய்து பார்த்தேன். துள்ளிக் குதித்தேன். borwserஐ, மறுமுறை திறக்கும் போது, திரும்பவும் முதலிலிருந்து செய்ய வேண்டியுள்ளதால், இனி குறிப்புகளை எடுத்து வைத்துக் கொள்கிறேன்.மேலும் பல நடைமுறைகளுக்கு, இதுபோன்ற குறிப்புகளை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறேன். வழக்கம் போல பணத்திற்காக 6-8 மணிநேர உழைக்கச் செல்கிறேன். வருகிறேன். வணக்கம்த*உழவன் 07:33, 10 பெப்ரவரி 2010 (UTC)
- தங்களது மகிழ்ச்சி எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் விவரங்களை கொடுத்துள்ளேன். பார்க்கவும்.
நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:46, 10 பெப்ரவரி 2010 (UTC)
காப்புரிமை
தொகு- சிற்பிக்கும் சேவற்காலுக்கும் நன்றி, சிற்பி நல்ல தளம். ஆனால், காப்புரிமை உள்ள தளம் என்பதைக் கவனத்தில் கொண்டு நாம் செயல்படவேண்டும். பழ.கந்தசாமி 16:12, 11 பெப்ரவரி 2010 (UTC)
- தங்களது பதிவுகள் நன்றாக இருக்கிறது. காப்புரிமை என்பதன் கீழ்வரும் பிறரது பதிவுகளை, நாம் 10% பயன்படுத்தலாம். எத்தகைய சட்டத் தொந்தரவுகளும் வராது. அவர்கள் வடிவத்தை நாம் அப்படியே பயன்படுத்தப் போவதில்லை. அவர்கள் உழைப்புடன், நமது உழைப்பையும் இணைத்து மெருகேற்றவே போகிறோம். காப்புரிமை என்பது பாதிக்கு மேல் வடிவத்திற்கே கொடுக்கப் படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், நிறைய பேர் முறைப்படி பெற்றவர்களும் அல்லர். எது எப்படியோ, 10% என்ற அளவுகோலை வைத்துக் கொளவது நல்லதே.
இத்தகைய சூழலில் நாம் பிற மொழி விக்சனரிகளையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நான் அப்படியே இந்தி மொழியினை, கடந்த ஒரு வாரமாகப் பயன்படுத்துகிறேன்.
எடுத்தக் குறிப்புகளை, விரைவாக உருவாகப்பட்ட படிவத்தில் இட்டு பதிவேற்றும் தொழில் நுட்பங்களைப் பற்றி, இப்பகுதியில் ஆராய்வதே நலம்.
அத்தகையக் குறிப்புகளை பெரியண்ணன் கூறிய படி, அட்டவணைப் படுத்தி பதிவேற்றம் செய்வதே சிறப்பாகப் படுகிறது. MsExcel நான் பயன்படுத்தியதில்லை. விசாரித்ததில் அதுவே சிறப்பு என்கின்றனர். வந்த சொல்லே திரும்ப வராமல், அதில் அமைத்துக் கொள்ளலாம் என்றும், நகலெடுத்து, விரைந்து ஒட்டமுடியும் என்றும் கூறுகின்றனர். நன்கு விசாரித்து, அமைத்து ஒரு சில நாட்களில் அனுப்புகிறேன்.
- நான் மேலே குறிப்பிட்ட வேலைகளுகான பட்டியலை Ms.Excel---லில் செய்து பார்த்தேன். மிகவும் எளிதாக இருக்கிறது. ஆகவே மேற்கொண்டு, பட்டியல்களை Ms.Excel---மூலம் உருவாக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். (Ms.Excel---லில் எனக்கு நிறைய முன் அனுபவம் உண்டு. ) ---TRYPPN---12 Feb, 2010
பெரியண்ணனுக்கு மேலும் ஒரு வேண்டுகோள். அட்டவணையில் இருந்து விரைவாக படிவத்திற்கு மாற்றி, பதிவேற்றம் செய்வதினைப் பற்றி இந்த Firefox and Chickenfootலில் சோதனை செய்யவும்.
இப்பொழுது ஒரு மணி நேரத்திற்கு 10 புதியப் பதிவுகளையே சரிபார்த்து பதிவேற்றம் செய்ய முடிகிறது.
AWB'யில் நான் அத்தகைய பதிவேற்றம் செய்யததில்லை. பகுப்பு மாற்றத்திற்கு அது அருமை. இருப்பினும் அதன் பதிவேற்றக் கணக்குகள் நம் கணக்கில் வருகிறதா என்றும் கவனிக்கவில்லை. அநேகமாக வராது என்றே நினைக்கிறேன். பிறகு AWB பற்றி தொடர்வோம்.
உடன் கருத்து சொல்ல முடியவில்லை. நாளை காலை 3மணி நேரம் விக்சனரியில் இருப்பேன். இந்திய நேரம் காலை 7-8; 10-12. உங்களுடன் உரையாட விருப்பம். மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்.த*உழவன் 17:32, 11 பெப்ரவரி 2010 (UTC)
- தங்களது குறிப்புகளைக் கொண்டு சொற்பட்டியலை ஆயுத்தப் படுத்திக் கொண்டு, பதிவு செய்து விட்டுச்சொல்கிறேன். ஏற்கனவே, இருக்கும் ஒரு தமிழ்ச்சொல்லுக்கு, இந்தி மொழிபெயர்ப்பை செய்து பார்த்தேன். insert() கொண்டு செய்து பார்த்தேன். இயலவில்லை.append () என்பதையும் செய்து பார்த்தேன். பிழையாக வருகிறது. தற்போது AWB யில் புதுச்சொல்லை பதிவேற்றுவது பற்றி அறிய ஆவல். நன்றி வணக்கம்.