விடிவுகாலம்

இருள் அகன்று ஒளி பிறக்கும் காட்சி..'விடிவுக்காலம்'

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

விடிவுகாலம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. துன்பங்கள் தீரும் காலம்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. the time when all problems & sufferings would come to an end.

விளக்கம் தொகு

'பேச்சு வழக்கு'...விடிவு + காலம் = விடிவுகாலம்...அதிகாலையில் சூரியன் தோன்றும்போது இருள் அகன்று, இருளினால் உண்டான அசௌகரியங்கள்/உபத்திரவங்கள் போய்விடுகின்றன...இதையே 'விடிவுகாலம் அல்லது 'விடியுங்காலம்' என்பர்...இந்தச்சொல்லை ஒருவரின் வாழ்க்கையில் பயன்படுத்தும்போது, அவருடைய துன்பங்கள் நீங்கும் காலத்தைக் குறிப்பிட பயன்படுத்துவர்.

பயன்பாடு தொகு

முத்து குமரன் அநேக கஷ்டங்கள், துயரங்களை அனுபவித்து வருகிறார்...எந்த விதமான உதவியும் யாராலும் கிடைப்பதில்லை...அவருக்கு எப்போது ஒரு 'விடிவுகாலம்' பிறக்குமோ அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=விடிவுகாலம்&oldid=1224016" இலிருந்து மீள்விக்கப்பட்டது