விலாங்கு மீன்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
விலாங்கு மீன், .
பொருள்
தொகு- ஒரு வகை மீன் இனம்
- இருதலைக் கபடம் கொண்ட மனிதர்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- eel fish
- a person who would support both the extreme views/actions/groups and the likes for his selfish motives.
விளக்கம்
தொகு- இது ஒரு நீளமான மெல்லிய மீன் வகை... தலை பாம்பைப்போன்றும் வால் மீனைப்போன்றும் இருக்கும்... இதன் எதிரிகள் இதைவிட பெரிய மீன்களும் பாம்புகளுமாகும்... ஆகவே பாம்புகளால் ஆபத்து ஏற்படுமானால் தானும் பாம்பினமே என்று தலையைக் காட்டியும், மீன்களால் ஆபத்து ஏற்படுங்கால் தானும் மீனினமே என்று வாலைக் காட்டியும் தப்பித்துக்கொள்ளுமாம்...
- இவ்வாறே மனிதர்களிலும் சிலர் கபடமாக இரு சாரார்/தரப்பு மக்களோடும் இணைவாக இருந்துகொண்டு அவர்களுடைய கொள்கைகள், காரியங்களை, தமக்கு விருப்பமில்லாதபோதும், சுயநலத்தோடு ஆதரித்துக்கொண்டிருப்பார்கள். இத்தகைய மனிதரை 'விலாங்கு மனிதன்' என்று அழைப்பர்...