மும்மூர்த்திகளில், படைப்புக்கான கடவுளான, பிரம்மாவின் பத்தினியாகிய சரசுவதி எனப்படும் கலைமகள், எல்லா கலைகளுக்கும், கல்வி, அறிவு, ஞானம் ஆகியவற்றிற்கும் தாயாக விளங்குகிறாள்...அளவற்ற கல்வியை இவள் இன்னமும் கற்றுக்கொண்டே யிருப்பதாகச் சொல்லப்படுகிறது...அந்தவகையில் எப்போதும் தன் கைகளில் வீணையை வைத்துக்கொண்டு மீட்டுக்கொண்டிருப்பதாகச் சித்தரிக்கப்படுகிறாள்...சமஸ்கிருதத்தில் பா1ணி எனும் சொல் கைகளையுடைய/கைகளில் கொண்ட என்னும் பொருளில் வழங்கப்படுகிறது...எக்காலமும் வீணையும் கையுமாக காட்சியளிப்பதால் இவள் வீணாபாணி யாகிறாள்..