வீறல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- வீறல், வினைச்சொல்.
வீறு1 vīṟudal, 5 செ.கு.வி.(v.i.)
1. மேம்படுதல்; to be distinguished, to be eminent.
போரூர் வீறிவா ழாறுமா முகனே(திருப்போ. சந். குறுங்கழி. 3, 1);.
2. மிகுதல்; to increase.
வீறுமுண்டி மிசைந்திட(கந்தபு.தானப். 20);.
3. கீறுதல்; to scratch, as with the point of an instrument, to tear.
நின்மெய்க்கட் குதிரையோ வீறியது(கலித். 96);.
வீறு2
vīṟudal,
5 செ.குன்றாவி.(v.t.)
1. வெட்டுதல்; to split, cut.
தெய்வவாள் வீறப் பொன்றினன்(கம்பரா. சம்பா 43);.
2. அடித்தல்; to beat, flog.
'அவனை நன்றாய் வீறினேன்' (இ.வ);.
வீறு3 vīṟu, பெ. (n.)
1. தனிப்பட்ட சிறப்பு; distinctive excellence.
வீறெய்தி மாண்டார்(குறள், 665);.
2. வெற்றி; victory.
வீறுபெற வோச்சி(மதுரைக். 54);.
3. வேறொன்றிற்கில்லா அழகு; unique beauty.
வீறுயர் கலச நன்னீர்(சீவக. 489);.
4. பொலிவு; splendour.
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி(திருமுரு.283);.
5. பெருமை (இல்க்.அக.);; greatness.
6. மிகுதி; abundance, plenty.
வாணிகர் வீற்றிலாபம் விளைவுழிச் சேறல்போல(சேதுபு. திருநாட். 42);.
7. நல்வினை; good fortune, merit.
விசையை யென்றுல கோடிய வீறிலேன்(சீவக. 1814);.
8. மருந்து முதலியவற்றின் வினை விளை வேகம்; strenth, as of medicines or poisons power.
'அந்த மருந்துக்கு வீறில்லை'.
9. தன்முனைப்பு; arrogance.
கங்கை வீறடக்கும்..... சடையாய்(காஞ்சிப். வாணிச். 84);.
10. வெறுப்பு (யாழ்.அக.);; dislike, disgust.
11. ஒளி (வின்.);; light brightness.
12. வேறு; separateness.
விறுவீ றியங்கும்(புறநா. 173);.
13. தனிமை (வின்.);; solitariness.
14. அடி; blow, strike.
'நாலு வீறு வீறினான்'.
வீறு4 vīṟu, பெ. (n.)
1. மருந்துச் சத்து; essence of medicine.
2. மருந்தின் பயன்விளைவு திறம்; power of medicine.
3. வெடிப்பு Crack
பயன்பாடு
தொகு- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வீறல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி