வெள்ளை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வெள்ளை, பெயர்ச்சொல்.
- ஒரு நிறம், வெண்மை
- வெள்ளை வெள் யாட்டுச்செச்சை (புறநா. 286)
- பலராமன்.
- மேழிவலனுயர்த்த வெள்ளை (சிலப். 14, 9)
- சுண்ணாம்பு
- சுண்ணாம்பு பால் மோர் என்ற மூன்று வெண்மையான பண்டங்கள்.
- வேண்டாதவ னிடத்திலும் வெள்ளை வாங்கலாம்.
- வெள்ளிநாணயவகை.
- வெள்ளை வெள்ளை யென் பார்கள் மேதினியோர் (பணவிடு. 341)
- வெள்ளீயம்
- வயிரம்.
- இது நல்ல வெள்ளை
- மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.)
- சங்கு. (ஈடு, 6, 1, 5, அரும்.)
- கள். (பிங்.)
- மலைப்புன்கு.
- வெள்ளைப்பாஷாணம்
- வைப்புப்பாஷாணவகை
- வேங்கைமரம்
- வெள்ளைத்துணி
- வெளுப்பு.
- கோடி யொரு வெள்ளை குமரி யொரு பிள்ளை
- வெள்ளைமாடு.
- பானிற வண்ணன் போற் பழிதீர்ந்த வெள்ளை (கலித். 104)
- வெள்ளாடு.
- துருவை வெள்ளையொடு விரைஇ (மலை படு. 414)
- வெள்ளாட்டுக்குட்டி
- கபடமற்றவன்-வள்-து.
- வெள்ளைக்கில்லை கள்ளச்சிந்தை (கொன்றைவே.)
- பற்றற்றவன். (ஈடு, 6, 1, 5, அரும்.)
- அறிவில்லாதவன்
- கருத்தாழமில்லாதது.
- நாவினில் விளையு மாற்ற நின் றிருவடிவினு மிகவெள்ளை யாகியது (பாரத. உலூகன்றூது)
- பொருள் வெளிப்படையானது.
- இந்தப் பாட்டு வெள்ளையா யிருக்கிறது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - veḷḷai
- white.
- Balarāma
- Lime mortar, slaked lime for whitewash
- The three white things, viz., cuṇṇāmpu, pāl, mōr
- A silver coin
- White lead
- Diamond
- A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam
- Conch
- Toddy
- Wight's Indian nettle
- A mineral poison
- A prepared arsenic
- Indian kino tree
- White cloth; cloth washed white
- Wash
- White cow or bull
- Goat
- Kid
- Guileless person or animal
- Person who has no attachments
- Ignorant person;
- That which is superficial and not deep or profound
- That which is plain in meaning
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +