ఇంటిపేరు
தெலுங்கு
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ఇంటిపేరు
ஒலிப்பு: இன்டி1-பே1-ரு-
பொருள்
தொகு- வீட்டுப்பெயர்
- குடும்பப்பெயர்
- தெலுங்கு மொழி பேசும் ஆந்திரர்களுக்கு வீட்டுப்பெயர் என்று ஒன்று உண்டு...இது வமிச பாரம்பரியமாகவும், கலாசார முறைப்படியும், அநேகத் தலைமுறைகளாக ஆண்களின் பெயர்களுக்குமுன் வருவதாகும்...ஆங்கிலத்தில் surname அல்லது family name என்பர்...தமிழர்கள் தங்கள் பெயர்களின்முன் அவரவர் தந்தையின் பெயர், ஊரின் பெயர் அல்லது அரிதாக வமிசத்தின் பெயர் அகியவற்றில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ இணைப்பர்...தெலுங்கர்கள் அவர்களின் வீட்டுப்பெயரை தங்கள் பெயரோடு இணைத்துக்கொள்ளுவர்...இது அவர்களின் பூர்வீகர்களின் ஊரின் பெயராகவோ அல்லது வேறு விதமான சிறப்புப் பெயராகவோ இருக்கும்...ஒவ்வொரு வீட்டுப்பெயருக்கும் வரலாறு உண்டு...ஆனால் தந்தையின் பெயராக இருக்காது...மணமான பெண்ணின் வீட்டுப்பெயர் அவளின் கணவனின் வீட்டுப்பெயரையே கொண்டிருக்கும்...எடுத்துக்காட்டாக புகழ்மிக்க தெலுங்கர்களில் சிலரின் பெயர்கள்: நீலம் சஞ்சீவ ரெட்டி, சர்வேபள்ளி ரதாகிருஷ்ணன், பெஜவாட கோபால ரெட்டி, டங்குடூரி பிரகாசம், நாரா சந்திரபாபு நாயுடு, கொணிஜேட்டி ரோசைய போன்றவை...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఇంటిపేరు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +