CD-4 Cell Count
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுCD-4 Cell Count
- சிடி-4 செல் எண்ணிக்கை
பரிசோதனைக்கான மாதிரி ரத்தத்தில் சிடி-4 செல்களின் எண்ணிக்கை அளவீடே இது. சிடி-4 எண்ணிக்கையை உடல் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கிய நிலையின் குறியீடாக கொள்ளலாம். எச்.ஐ.வி./எய்ட்ஸ் நிலையையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எச்.ஐ.வி.க்கு எதிரான மருந்தை எப்போது தொடங்கலாம், எப்போது மருந்துகளை மாற்றிக் கொடுக்கலாம், நிறுத்தலாம் போன்றவற்றை முடிவு செய்யலாம். எச்.ஐ.வி.க்கு எதிரான மருந்து சிகிச்சை வேலை செய்கிறதா என்பதை அறியவும், சந்தர்ப்பவாத நோய்களுக்கு எப்போது சிகிச்சை அளிக்கலாம் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வதற்கும் சிடி-4 எண்ணிக்கையை அறிந்து கொள்வது மிக அவசியம். சாதாரணமாக ஒரு கன மில்லிமீட்டர் ரத்தத்தில் 500 முதல் 1400 சிடி-4 செல்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு தனி நபருக்கும் இந்த எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கும். எச்.ஐ.வி. தொற்று உள்ளவருக்கு சிடி4 எண்ணிக்கை ஒரு கன மில்லி மீட்டர் ரத்தத்தில் 200க்கும் கீழே குறையும் போது அவர் எய்ட்ஸ் நிலையை அடைகிறார்.