Internet security

பொருள்

தொகு
  1. இணையப் பாதுகாப்பு

விளக்கம்

தொகு
  1. இணையத் தரவு பரிமாற்றத்தில் தரவு சான்றுறுதி, அந்தரங்கம், நம்பகத்தன்மை, சரிபார்ப்பு இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கருத்துரு. (எ-டு) வைய விரிவலையில் (www) உலாவி (Browser) மூலமாக பற்று அட்டையைப் (Credit Card) பயன்படுத்தி ஒரு பொருளை வாங்குவதில் பல்வேறு பாது காப்புச் சிக்கல்கள் அடங்கியுள்ளன. முதலாவதாக இணையம் வழியாக அனுப்பப்படும் பற்று அட்டையின் எண்ணை அத்துமீறிகள் எவரும் குறுக்கிட்டு அறிந்து கொள்ளக்கூடாது. அவ்வெண் பதிந்து வைக்கப்பட்டுள்ள வழங்கன் கணினியிலிருந்து வேறெவரும் நகலெடுத்துவிடக் கூடாது. அந்த பற்று அட்டை எண்ணை அதற்குரிய நபர்தான் அனுப்பினாரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அதை அனுப்பியவர் பின்னாளில் தான் அனுப்ப வில்லை என்று மறுதலிக்க வழி யிருக்கக் கூடாது.

உசாத்துணை

தொகு
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Internet_security&oldid=1910255" இலிருந்து மீள்விக்கப்பட்டது