Primary Domain Controller

பொருள் தொகு

  1. முதன்மைக் களக் கட்டுப்படுத்தி

விளக்கம் தொகு

  1. விண்டோஸ் என்டீ-யில் பிணைய வளங்களையும், பயனாளர் கணக்குகளையும் மையப்படுத்தப்பட்ட முறையில் நிர்வகிக்க உதவும் ஒரு தரவுத்தளம். பயனாளர்கள் ஒரு குறிப்பிட்ட புரவன் கணினியில் துழைவதற்குப் பதிலாக ஒரு களத்தினுள் துழைய இந்த தரவுத் தளம் அனுமதிக்கிறது. ஒருகளத்தினுள் இருக்கும் கணினிகள் பற்றிய விவரங்களை வேறொரு கணக்குவைப்புத் தரவுத்தளம் கவனித்துக் கொள்கிறது. களத்தின் வளங்களைப் பயனாளர்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது.
  2. ஒரு குறும்பரப்புப் பிணையத்தில், களத்தின் பயனாளர் கணக்குகளுக்கான தரவுத்தளத்தின் முதன்மை நகலைப் பராமரித்து, பயனாளர்களின் புகுபதிகைக் கோரிக்கைகளைச் சரிபார்க்கும் பணிகளைக் கவனித்துக் கொள்ளும் வழங்கன் கணினி.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Primary_Domain_Controller&oldid=1909426" இலிருந்து மீள்விக்கப்பட்டது