christianity
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுchristianity
- கிறிஸ்தவம், கிறித்தவம்
- (பழைய வழக்கு) சத்திய வேதம்
விளக்கம்
தொகுகிறித்தவம் (கிறிஸ்தவம்) என்னும் சொல் கிரேக்க மூலத்திலிருந்து பிறந்தது. கிரேக்கத்தில் Xριστός (Khristos) (ஆங்.:"Christ") என்றால் திருப்பொழிவு (அருள்பொழிவு) பெற்றவர் (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்று பொருள்படும். நாசரேத்து இயேசு கடவுளிடமிருந்து திருப்பொழிவு பெற்று, இவ்வுலகில் கடவுளின் மகனாகப் பிறந்து, மனிதரைப் பாவத்திலிருந்து மீட்டு அவர்களுக்குப் பேரின்ப வாழ்வளித்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை, கிறித்தவத்தின் மையக் கொள்கை.
எடுத்துக்காட்டு
தொகு- ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார் (லூக்கா 4:18)திருவிவிலியம்
- அந்தியோக்கியாவில் தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள் (திருத்தூதர் பணிகள் 11:26) திருவிவிலியம்