classless interdomain routing

ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • classless interdomain routing, பெயர்ச்சொல்.
  1. பிரிவிலாக் களங்களுக்கிடையே திசைவித்தல்

விளக்கம் தொகு

  1. இணையத்தில் உயர்நிலை திசை செலுத்து அட்டவணைகளின் உருவளவைச் சிறிதாக்க, ஒருங்கிணைப்புச் செயல் தந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு முகவரி அமைப்பு முறை. முதன்மை திசைவிகள் (Routers) ஏந்திச் செல்லும் தரவுகளின் அளவைக் குறைக்கும் பொருட்டு, பல்வேறு திசை வழிகள் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தத் திட்ட முறை செயல்பட இதனை ஏற்றுக் கொள்ளும் திசைவித்தல் நெறிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். எல்லை நுழை வாயில் நெறிமுறை (Border Gate way Protocol-BGP) யின் பதிப்பு 4 மற்றும் ஆர்ஐபீயின் பதிப்பு 2 (RIPV-2) இவற்றுள் சில. இத்திட்டமுறையின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் CIDR ஆகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---classless interdomain routing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=classless_interdomain_routing&oldid=1985919" இலிருந்து மீள்விக்கப்பட்டது