file fragmentation

பொருள் தொகு

  1. கோப்புக் கூறாக்கம்

விளக்கம் தொகு

  1. 1. ஒரு கோப்பின் விவரங்கள் வட்டில் தொடர்ச்சியாக எழுதப்படுவதில்லை. சிறுசிறு கூறுகளாக்கப்பட்டு வட்டில் ஆங்காங்கே பதியப்படுகின்றன. எங்கே பதியப்பட்டுள்ளது என்கிற விவரம் ஒர் அட்டவணையில் எழுதப்படுகிறது. இதன் காரணமாய் வட்டில் எழுதப்படாத இடங்களும் தொடர்ச்சியாக இருப் பதில்லை. வட்டு நிறைந்து போகின்ற நிலையில் கோப்பினை எழுதவும் படிக்கவும் அதிக நேரம் ஆவதுண்டு. இவ்வாறு கூறுகளாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை ஒரளவு வரிசையாக எடுத்தெழுதுவதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன. 2. ஒரு தரவுத் தளத்தில் அட்டவணைக் கோப்பில் (Tables) ஏடுகள் (Records) வரிசையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. அவ்வப்போது ஏடுகளை அழிக்கிறோம், சேர்க்கிறோம். இதனால் ஏடுகள் கூறாகிக் கிடக்கும். ஆனால் பெரும்பாலான தரவுத் தள தொகுப்புகளில் ஏடுகளை வரிசைப்படுவதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=file_fragmentation&oldid=1909271" இலிருந்து மீள்விக்கப்பட்டது