firmware
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுfirmware
- திடப்பொருள் (மென்பொருளுக்கும், வன்பொருளுக்கும் இடைப்பட்டது).
- நிலைக்கலன் (மென்கலனுக்கும், வன்கலனுக்கும் இடைப்பட்டது).
விளக்கம்
தொகு- படிப்பதற்கு மட்டுமுள்ள நினைவகத்தில் சேமிக்கப்படும் நிகழ்நிரல் அல்லது தகவல். மென்பொருளால் இதை மாற்ற இயலாது. மின்சாரம் நிற்கும் பொழுது இது இழப்புக்கு உள்ளாவதில்லை.
- இவை இயங்குதளங்களுக்குக் கீழே வன்கலன்களுக்கு நெருக்கமாக இயங்குபவை. சில சமயங்களில் பாதுகாப்புச் சிக்கல்களைக் களையவும், வழுக்களை நீக்கவும் அவற்றைத் திருத்த நேரிடலாம். அப்போது அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் (update firmware). சில சமயங்களில், பயனர்கள் வெகுசில தரவுகளை மாற்றிச் சேமிக்கலாம். கடவுச்சொல்லை இட்டுக் கணினியைப் பூட்டுவதும் பிற பாதுகாப்புச் செயல்களும் அவற்றில் அடங்கும். நிலைக்கலன்கள் எல்லா இயங்குதளங்களுக்கும் பொதுவானவை.