hard disk store

பொருள் தொகு

  1. நிலைவட்டுச் சேமிப்பு

விளக்கம் தொகு

  1. தன் அலகுக்குள் முத்திரையிடப்பட்டுள்ள ஒரு வட்டு. இந்த வட்டினை அகற்ற முடியாதாகையால் எழுத்து/ படிப்புமுனை அதன் மேற்பரப்புக்கு மிக அருகில் இருக்கும்; தடங்களை அடர்த்தியாகச் செறிவாக்கம் செய்யலாம். துல்லியத் தொழில் நுட்பம் காரணமாக ஒரு படியெடுப்பு நெகிழ் வட்டினைவிட ஒரு நிலை வட்டு மிக அதிகத் திறம்பாடு கொண்டதாக இருக்கிறது. இது, நுண் சாதனங்களுக்கான 300 அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மெகா எட்டியல்களைக் கொண்டது. நெகிழ் வட்டுகளைப் போலவே, இதிலும் மென் பொருள் ஆணைகள்மூலம் செய்திக் குறிப்புகளையும், செயல் முறைகளையும் சேர்க்கலாம். நிலைவட்டுகளை"வின்செஸ்டர் வட்டு இயக்கிகள் (Windchester disk drives) என்றும் அழைப்பர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=hard_disk_store&oldid=1907011" இலிருந்து மீள்விக்கப்பட்டது