jasminum
ஆங்கிலம்
தொகுசொற்பிறப்பியல்
தொகுஅரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [1] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. சான்று
பொருள்
தொகு- jasminum, பெயர்ச்சொல்.
- மல்லிப் பேரினம்
- குமரிஞாழல்
- ஞாழல், காசி முல்லை
விளக்கம்
தொகு- Jasminum என்று தாவரவியல் முறைப்படி முதல் எழுத்து இலத்தீனிய மேலெழுத்தாக/பெரிய எழுத்தாக இருக்க வேண்டும். இம்மல்லி வகைகள் இருநூற்றிற்கும் மேற்பட்டு உள்ளன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jasminum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் சொற்குவை இணையதள பக்கம்