பொருள்

launching

  • கலம் செலுத்துதல்
  • ஏவுதல்
விளக்கம்
  • ஏவுகணை ஏவப்படுதலைக் குறிக்கும். ஏவுகணை அடுக்கு முறையில் ஏவப்படுவதால் படிப்படியாக அது விரைவைப் பெற்றுப் புவியைச் சுற்றும் அல்லது திங்கள், செவ்வாய் முதலிய கோள்களுக்குச் செல்லும், செயற்கை நிலாவைப் புவிச் சுற்றுவழியில் விட ஏவுகணை மணிக்கு 18000 மைல் விரைவில் செல்லும் திங்கள் முதலிய கோள்களுக்குச் செயற்கை நிலா 25000 மைல் விரைவில் செல்லும். புவிச்சுற்று வழியிலிருந்து செயற்கை நிலா அதிலுள்ள ஏவுகணை யினால் முடுக்கி விடப்படும் முன்னரே, நிலா 1 மணிக்கு 18000 மைல் விரைவைப் பெற்றுவிட்டதால், 1 மணிக்கு 7000 மைல் விரைவில் சென்றால் போதும்.இவ்விரைவிலேயே ஏவுகணை அதனைக் கொண்டு செல்லும். இம்முறையிலேயே உலூனிக், பயனியர், அப்பல்லோ முதலிய கோள் நிலாக்கள் சென்றன. இலக்கு என்பது அடைய வேண்டிய இடத்தைக் குறிக்கும்.புவியில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தை அடைவது எறி படைகளுக்கு இலக்கு (சிகட், பேட்ரியாட் ஏவுகணைகள்), சுற்று வழியை அடைவது புவி நிலாக்களுக்கும். திங்கள், செவ்வாய் முதலிய கோள்களை அடைவது கோள் நிலாக்களுக்கும் இலக்கு. இவ்வாறு அடைய வேண்டிய இடத்தைப் பொறுத்து இலக்கு வேறுபடுகிறது. இலக்கை அடைந் தால் தான் கலம் வெற்றியுடன் ஏவப்பட்டதாகக் கொள்ளலாம். கலம் வெற்றியுடன் ஏவப்பட வேண்டுமானால் திசை, கோணம், விரைவு, நேரம், வழி, ஏற்பாட்டியக்கம் முதலியவை கணக்கில் கொள்ளப்பட வேண்டும்
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=launching&oldid=1898982" இலிருந்து மீள்விக்கப்பட்டது