பொருள்
  • வடிவியல் ஒருங்கமைப்பு
விளக்கம்
  • இது கட்டுமானத் துறையில் ஒரு அடிப்படை உறுப்பு அல்லது அங்கத்தின் வடிவ அளவீடுகளை, எளிய கணக்கிடுதலுக்கு ஏதுவாக, முழுமைப் படுத்தப்பட்ட எளிய எண்ணியல் இலக்கங்களைக் கொண்டு உருவாக்குதலாகும். உதாரணமாக மனை வடிவத் திட்டத்தின் வரைபடத்திலும், சுவர்களின் நீள்வாக்கு அச்சு அல்லது கிடைமட்ட அச்சு வாக்கில் மையக் கோடுகளுக்கு இடையில் உள்ள தூரம், அலமாரி அடுக்குகளின் அகலம் போன்ற அங்கங்களின் வடிவியல் நீள அளவுகளை பத்து செ.மீ. அல்லது அதன் மடங்குகளாக வடிவமைத்தால் கணக்கிடுதல் எளியதாக இருக்கும். ஒரு அடிப்படை வடிவியல் அலகு (1 Module) M என்ற குறியீட்டால் குரிக்கப்பாடுகிறது. எனவே 60 செ.மீ என்பதை 6M எனக் குறிப்பிடலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=modular_coordination&oldid=1062593" இலிருந்து மீள்விக்கப்பட்டது