morpheme
ஆங்கிலம்
தொகுmorpheme (பெ)
- ஒரு மொழியில் பொருள் உணர்த்தும் யாவற்றினும் மிகச்சிறிய அடிப்படைக் கூறு, மொழியணு அல்லது சொல்லணு அல்லது உருபன் இதனினும் சிறியதாக பகுத்தால் எப்பொருளும் தராத தனிச்சிறுங்கூறு. விளக்கம் பார்க்கவும்.
- மொழியியல். உருபன்
விளக்கம்
ஆங்கிலமொழியில் unkind என்னும் சொல்லை எழுத்துக்கொண்டால், kind என்பது அன்பான என்று பொருள்தரும் ஒரு சொல்லணு, un என்பது எதிர்மறைப் பொருள் தரும் சொற்கூறு; எனவே kind, un ஆகிய இரண்டு பகுதிகளும் மொழியணுக்கள் அல்லது சொல்லணுக்கள் அல்லது உருபன்கள் எனப்படுகின்றன . இவற்றை மேலும் பகுத்தால் (பிரித்தால்) பொருள் உணர்த்தாது; kind என்பதில் d என்னும் எழுத்தை நீக்கிவிட்டால் kin என்னும் பிரிதொரு சொல்லாகிவிடும். எனவே இரண்டு சொல்லணுக்களும் சேர்ந்து unkind என்றால் அன்பில்லாத அல்லது அன்பில்லாமல் என்று பொருள் படுகின்றது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +