பொருள்
  • off side, பெயர்ச்சொல்.
  1. கிரிக்கெட். முன் புறம்; முன்பக்கம்; முன்பக்கப் பகுதி. மட்டையர் பந்தை எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளபோது, அவரின் முன்புறம் உள்ள பாதி வெளி.
  2. விலகுபுறம். [1]
  3. பிற விளையாட்டுகள். ஆட்ட வெளியில் விதிகளுக்குப் புறம்பான பகுதியில் தங்கி விளையாடுதல்.
  4. கால் பந்தாட்ட்டம் - தனது குழுவினர் பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்க்குழு இலக்குக்கு அருகில் ஒரு ஆட்டக்காரர் பந்துக்கு முன்னதாக, போய் நின்று கொண்டிருந்தால் அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்படுவார். ஒரு ஆட்டக்காரர் தான் பந்தைப் பெறுகிற பொழுது எங்கு நின்று கொண்டிருந்தார் என்பதைவிட, எந்த சமயத்தில் அவர் எங்கு நின்று கொண்டு தனது குழுவினரிடம் இருந்து பந்தைப் பெற்றார் என்பதைக் கண்டறிந்தே அவர் அயலிடத்தில் இருந்ததாக அறிவிக்கப்படும்.

̆ அயலிடத்தில் ஒரு ஆட்டக்காரர் நிற்கவில்லை என்பதாக கீழ்க்காணும் விதிகளின்படி அறிந்து கொள்ளலாம்.

1. தன்னுடைய சொந்தப் பகுதியில் நிற்கும் பொழுது.

2. தான் நிற்கும் இடத்திற்கு முன்னதாக எதிர்க்குழுவைச் சேர்ந்த யாராவது இருவர் இலக்குக்கு அருகாமையில் நின்று கொண்டிருக்கும் பொழுது.

3. தான் அயலிடத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது, எதிர்க்குழுவினரின் மேல் பந்து பட்டுத் தன்னிடத் தில் வந்தாலும், தன்னால் பந்து கடைசியாக ஆடப்படும் பொழுதும் அவர் 'அயலிடம்' ஆவதில்லை.

4. குறியுதை, முனையுதை, உள்ளெறிதல், நடுவரால் பந்தை தூக்கிப் போடப்படுதல் போன்ற சூழ்நிலைகளில் அவர் தானே பந்தை எடுத்தாடும் போது அவர் அயலிடம் ஆவதில்லை.

தண்டனை : ஒருவர் அயலிடத்தில் நின்றதாக நடுவரால் தீர்மானிக்கப்பட்டால், அதற்குத் தண்டனையாக எதிர்க் குழுவினர் மறைமுகத் தனி உதை உதைக்கும் வாய்ப்பினைப் பெறுமாறு நடுவர் ஆணையிடுவார். தவறு நடந்த இடத்தில் பந்தை வைத்து எதிர்க்குழுவில் உள்ள ஒருவர் உதைக்க, ஆட்டம் தொடரும்.


குறிப்புதவி

தொகு
  1. தொழில்நுட்பம்.காம் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=off_side&oldid=1898061" இலிருந்து மீள்விக்கப்பட்டது