பொ௫ள் தொகு

  1. பொதுத்திறவி மறையாக்கம்

விளக்கம் தொகு

  1. மறையாக்கத்திற்கு இரட்டைத் திறவிகளைப் பயன்படுத்துகிற ஒர் ஒத்திசைவில்லா மறையாக்கமுறை. பொதுத்திறவியைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட செய்தியை, செய்திக்குரியவர் தனக்கே உரிய தனித்திறவி மூலம் மறைவிலக்கம் செய்து கொள்வார். இலக்கமுறைக் ஒப்பத்தைப் பொறுத்தவரை இந்த வழிமுறை எதிர்முறையானது. அதாவது செய்தியை அனுப்புபவர் இரகசியத்திறவியைப் பயன்படுத்தி ஒரு தனித்த மின்னணு எண்ணை உருவாக்குகிறார். இச்செய்தியினைப் படிக்க விரும்புபவர் அதற்கேற்ற பொதுத்திறவி மூலம் பரி சோதித்து குறிப்பிட்ட நபரிடமிருந்துதான் செய்தி வந்ததா என அறிந்து கொள்ளலாம்.

உசாத்துணை தொகு

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=public_key_encryption&oldid=1909810" இலிருந்து மீள்விக்கப்பட்டது