relay-race
ஆங்கிலம்
தொகுrelay-race
- அஞ்சல் ஓட்டப்பந்தயம்; இடைமாற்று ஓட்டப்பந்தயம்
- தொடரோட்டப் போட்டி
விளக்கம்
தொகு- ஒரே குழுவைச் சேர்ந்த நான்கு ஒட்டக்காரர்கள், ஒரு குறிப்பிட்ட ஒட்ட தூரத்தை, ஒவ்வொருவரும் ஒரே அளவு குறிப்பிட்ட தூரத்தைக் கடப்பது போல் (உ.ம். 4X 100= 400 மீட்டர் ஓட்டம் என்பது போல) ஒவ்வொருவரும் ஒடிச் சென்று முடிப்பது தான் தொடரோட்டமாகும். அவ்வாறு, ஒடும் பொழுது, அதற்குச் சான்றாக, அவர்களின் கையில் உள்ள குறுந்தடி (Baton) ஒவ்வொருவருக்கும் மாற்றப்படுவது என்பது விதிக்குட்பட்ட முறையாகும். இவ்வாறு மாற்றப்படும் எல்லை 20 மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீழே குறுந்தடியைத் தவறவிட்டவர், பிறர் உதவியின்றி, தானே போய் எடுத்துக் கொண்டு தான் ஓடவேண்டும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +