synchronism
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
synchronism
- இயற்பியல். ஒருகாலங்காட்டுதன்மை
- பொறியியல். ஒத்தியக்கம்; ஒருகாலங்காட்டுதன்மை
- வரலாற்றியல் ஒருகாலங்காட்டுதன்மை
பயன்பாடு
- கயவாகு காலக்கணிப்பு முறை (படம்) என்பது ஒத்த கால அரசர்களை கொண்டு காலக்கோடு அமைக்கும் வரலாற்று வரைவு முறையாகும். இலங்கையை அரசாண்ட கயவாகுவின் ஆட்சிக்காலம் தெளிவாக வரையறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் சங்ககால தமிழக அரசர்களின் ஆட்சிக்காலம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. அதனால் சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கயவாகுவும் மகாவம்சத்தில் கூறப்படும் கஜபாகுவும் ஒன்றென கொண்ட வரலாற்றாய்வாளர் கயவாகுவின் சமகால தமிழக ஆட்சியாளராக குடுவன் என்ற சேர அரசனை கொண்டனர். சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் வெல்புகழ்க்குட்டுவன் என்பவனின் காலத்தை மையமாக வைத்தே அவனது உறவினர்கள், அவர்களை பாடிய புலவர்கள், அந்த புலவர்கள் பாடிய மற்ற சேர, சோழ, பாண்டிய அரசர்கள், வேளிர், சீறூர்மன்னர், குறுநிலமன்னர் போன்றவர்களின் காலத்தையும் தமிழ் வரலாற்றாய்வாளர்கள் கணித்தனர்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் synchronism