transgender
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பயன்பாடு
பிறப்பில் தரப்பட்ட பால் வகைமையுடன் தங்கள் பாலின அடையாளம் ஒத்துப் போகாதவர்கள் மருவிய பாலினம்/ மாறிய பாலினம் (இதுவரை திருநர் என்று வழங்கப்பட்டு வந்தது) என்று அழைக்கப்படுகிறார்கள். பிறப்பால் ஆண் அல்லது பெண்ணாக வகைப்படுத்தப்பட்டவர்களும், ஊடுபால்/இடைப்பால் நபர்களும் மருவிய பாலினம்/ மாறிய பாலினத்தவர்களாக இருக்கலாம். உச்ச நீதிமன்ற NALSA தீர்ப்பு (2014) மற்றும் 2019ம் ஆண்டின் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் படியும் தன்னை மருவிய பாலினம்/ மாறிய பாலினத்தவர்களாக அடையாளப் படுத்திக் கொள்ளும் நபர் ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை போன்ற பாலின உறுதிப்பாட்டு செயல்முறைகளை கட்டாயம் செய்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.