web browser
ஆங்கிலம்
தொகு
பொருள்
தொகு- web browser, பெயர்ச்சொல்.
- வலை உலவி
விளக்கம்
தொகு- இணைய உலாவி: வைய விரி வலையிலோ, ஒரு பிணையத்திலோ அல்லது தன் சொந்தக் கணினியிலோ பயனாளர் ஒருவர் ஹெச்டிஎம்எல் ஆவணங்களைப் பார்வை யிடுவதுடன்,அதிலுள்ள மீத்தொடுப்புகள் மூலம் பிற ஆவணங்களையும் பார்வையிட்டு தேவையான கோப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ள உதவும் ஒரு கிளையன் பயன்பாடு. லின்க்ஸ்(Lynx) போன்ற இணைய உலாவிகள், செயல்தளக் கணக்கு (Shell Account) வைத்திருப்பவர்கள் பயன்படுத்துவது. ஹெச்டீஎம்எல் ஆவணத்தின் உரைப்பகுதியை மட்டுமே பார்வையிட முடியும். பெரும்பாலான உலாவிகள் உரைப்பகுதி மட்டுமின்றி வரைகலைப் படங்கள்,கேட் பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலையும் தருகின்றன.ஹெச்டீஎம்எல் ஆவணத்தில் உட்பொதிவாக இருக்கும் ஜாவா அப்லெட்டுகள் அல்லது ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசை கள் போன்ற சிறுநிரல்களையும் இயக்கும் வல்லமை பெற்றுள்ளன. சில உலாவிகளுக்கு இதுபோன்ற பணிகளைச் செய்ய உதவி மென் பொருள்கள் (plug-ins) வேண்டியிருக்கலாம். தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் இணைய உலாவிகள்,பயனாளர்கள்,மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் உதவுகின்றன.செய்திக்குழுக்களைப் பார்வையிடவும் கட்டுரைகள் அஞ்சல் செய்யவும் பயன்படுகின்றன.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ் புளோரர்,நெட்ஸ்கேப் நிறுவனத் தின் நேவிக்கேட்டர் ஆகிய இரண்டு உலாவிகளும் உலகத்தில் பெரும்பாலான பயனாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இணைய உலாவி சுருக்கமாக உலாவி என்றும் அழைக்கப்படுகின்றது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---web browser--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்