ஆங்கிலம் தொகு

 
zea mays:
பலவகை மக்காச்சோளக்கதிர்கள்

பொருள் தொகு

  • zea mays, பெயர்ச்சொல்.
  1. மக்காச்சோளம்

விளக்கம் தொகு

  1. zea mays என்பது மக்காச்சோளத்தின் தாவரவியற் பெயராகும்...உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஓர் உணவுத் தாவரம்... உலகில் அதிகம் பயிரிடப்படும் பயிர் இதுவே ...உலகின் இந்தச் சோள உற்பத்தியில் பாதியளவு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறுகிறது... இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது...கலப்பினங்கள் உட்பட இவற்றில் பலவிதமான வகைகள் உள்ளன... இவற்றைப் பெரும்பாலும் சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர்...இந்தியாவில் இந்தச் சோளக் கதிர்களை கரிநெருப்பனலில் வாட்டி எடுத்தும், மணிகளை உப்பிட்டு வேகவைத்தும், மாவாக்கி உரொட்டி சுட்டும் மற்றும் மெல்லிய இரவையாக்கி உப்புமா போன்ற உணவுகளைச் செய்தும் உண்பர்...உடலுக்கு நல்ல சக்தியையும், பலத்தையும் கொடுக்கக்கூடிய உணவு...மேலும் பசியையடக்கும், விந்திறுகச் செய்யும்,பேதி முதலியவற்றைக் கட்டும்...ஆனால் சிறிது வாயுவை உண்டு பண்ணும்...இந்த உணவுத் தாவரத்திற்கு இந்தியா தாயகமன்று...அரேபியாவின் மக்காவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டதால் மக்காச்சோளம் என்று அறியப்பட்டது...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---zea mays--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=zea_mays&oldid=1844937" இலிருந்து மீள்விக்கப்பட்டது