அகத்திக்கீரை
தமிழ்
தொகு
|
---|
- Agati Grandiflora..(தாவரவியல் பெயர்)--Leaves AND
- Sesbania Grandiflora..(தாவரவியல் பெயர்)--Leaves
பொருள்
தொகுஅகத்திக்கீரை, .
- கீரை வகைகளுள் ஒன்று
- 63 வகை சத்துக்களைக் கொண்டதாக சித்த மருத்துவம் கூறுகிறது.
விளக்கம்
தொகுமருத்துவ குணங்களுள்ள கீரை வகை. ஏகாதசி விரதம் முடிந்த மறுநாள் துவாதசியன்று கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் உண்டு. வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும் குணமுள்ளது. இந்த கீரையை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால் மிகவும் புண்ணியம் என்று கருதப்படுகிறது. அகத்திப் பூக்களையும் சமைத்து உண்பர்.
- மருத்துவ குணங்கள்
- வாரத்திற்கு ஓரிரு முறை உண்டுவர உடல் சூடு குறையும்...கண்கள் குளிர்ச்சி பெறும்...மலம் இளகலாகப் போகும்...சிறுநீர் தடையில்லாமல் தாராளமாகப் போகும்...மேலும் மகோதர வீக்கம், நீரடைப்பு, பித்த மயக்கம்ஆகியவையும் நீங்கும்...
- இந்தக்கீரையை காம்பு, பழுப்பு, பூச்சிகள்,தூசி நீக்கி அரைத்து அடிப்பட்டு இரத்தம் சொரியும் காயங்களுக்குக் கட்ட சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறும்...
- இந்தக்கீரை மருந்துகளின் வீறுகளைக் கெடுத்துவிடுமாதலால் பத்தியம் இருப்போர் உண்ணுதல் ஆகாது.
- இதிலிருந்துத் தயாரிக்கப்படுவதே அகத்திக்கீரைத்தைலம். இதைக்கொண்டு வாரமொரு முறை தலையில் தேய்த்துக் குளித்துவர பித்தம் தணிந்து, பித்தத் தலைவலி போகும்...கண்களும் குளிர்ச்சி பெறும்...
- அகத்திக்கு ஆதாரம்...[1]
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- agati tree leaves.
- hummingbird tree leaves.
- west indian pea-tree.