அசுவனி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அசுவனி, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இந்துப் பஞ்சாங்கம் மற்றும் சோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்படும் இருபத்தேழு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரத்தின் பெயர் அசுவனி...இந்த நட்சத்திரங்கள் ஒருவரின் வாழ்நாளில் பல்வேறு காலகட்டங்களில் சம்பவிக்கும், நன்மை, தீமைகளையும் மற்றும் பொதுப்பலன்களையுமறியும் சாதகம்/ஜாதகம் எனப்படும் ஆவணத் தயாரிப்பிலும், தனிநபர்களின் பிறந்தநாட்களையறிந்துக் கொண்டாடுவதிலும் பயனாகின்றன...சமயச் சடங்குகளைச் செய்யவும், ஒரு தினத்தில் உண்டாகக்கூடிய நன்மை தீமைகளை நட்சத்திரத்தோடு சம்பந்தப்பட்ட இராசியின் வாயிலாக ஒருவருக்குத் தெரிவிக்கவும் பயனாகின்றன...மேலும் சில இறைவனின் பூவுலகத் தோற்ற நாட்களையும், சமயப்பெரியோர்களின் பிறந்த நாட்களையுமயறிந்து கொண்டாடவும், ஒரு காரியம் செய்ய நல்ல நாட்களைக் கண்டறியவும் இந்துக்களால் உபயோகப்படுத்தப்படுகின்றன...நட்சத்திரங்களின் பெயர்களின் அடிப்படையில் இந்துக் குழந்தைகளுக்கு பெயர்களும் சூட்டப்படுகின்றன...திருமணப் பொருத்தங்களில் நட்சத்திரப் பொருத்தமும் ஒன்றாகும்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अश्विनि--அஶ்விநி--மூலச்சொல்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +