அத்திப்பிஞ்சுகளை நறுக்கி துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்போடுக் கூட்டி கூட்டமுது செய்து உண்ணலாம்...இது உடம்புக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்...இந்தப் பிஞ்சுகளை வேறு சரக்குகளோடு சேர்த்து அத்திப்பிஞ்சு கலவைக் கற்கம்என்னும் மருந்து தயாரித்து சில நோய்களைக் குணப்படுத்த உபயோகிப்பர்...
அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை ஆகிய சரக்குகளைச் சமனெடையாகத் தட்டையான அம்மிக்கல்லில் வாழைப்பூச் சாறுவிட்டு நெகிழ அரைத்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு நெல்லிக்காய் அளவு தினம் மூன்று வேளை கொடுத்தால் சீதபேதி, இரத்தபேதி, வயிற்றுக்கடுப்பு முதலியவைகள் நீங்கும்...