அறுகீரை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- அறு + கீரை = அறுகீரை
- (Amarantus Tristis...(தாவரவியல் பெயர்))
பொருள்
தொகு- அறுகீரை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகுகுணம்
தொகு#பல நோய்களுக்கும் உகந்த மிக நல்ல உணவு...இந்த கீரையினால் சுரம், நடுக்கம், சன்னிபாதம், கபரோகம், வாதநோய் இவைகள் போகும்... தாது விருத்தியாகும்..
உபயோகிக்கும் முறை
தொகு- அறுகீரையை நன்றாகக் கழுவி பாகப்படி சமைத்து உண்டால், மேற்கண்டப் பிணிகள் நிவர்த்தியாகும்...இது சாதாரணமாக சூட்டுடல் (உஷ்ண தேகி)
உடையவர்களுக்கு ஆகாது...இது பத்திய உணவுப்பொருட்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருந்தாலும் வாத, கப உடலுடையவர்களுக்கே மருந்துகள் சாப்பிடும் காலத்தில் சேர்த்துக்கொள்ளலாம்...அறுகீரை விதைகளைக் கொண்டு அறுகீரைவிதைத் தைலம் செய்து உபயோகித்தால் தலைவலி போகும்...தலைமுடி கருக்கும்... அறுகீரைவிதைத் தைலம் தயாரிக்கும் முறையை அறிய இங்கு சொடுக்கவும்[1]
( மொழிகள் ) |
சான்றுகள் ---அறுகீரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி