ஆக்குதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆக்குதல், பெயர்ச்சொல்.
- செய்தல்
- எரிப்பச்சுட்டெவ்வநோ யாக்கும் (நாலடியார் )
- சிருஷ்டித்தல்
- அனைத்துலகு மாக்குவாய் காப்பா யழிப்பாய் (திருவாசகம்)
- அமைத்துக் கொள்ளுதல்
- நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினாரென்ப (தொல்காப்பியம் சொல். சேனா..)
- சமைத்தல்
- ஆக்கப் பொறுத்த நமக்கு (இராமநா. அயோத்.. )
- உயர்த்துதல்
- ஒன்னார்த் தெறலு முவந்தாரையாக்கலும் (திருக்குறள்)
- மாற்றுதல்
- முல்லையை மருத மாக்கி (கம்பராமாயணம் ஆற்.. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to make
- to create
- to start with
- to prepare
- Initiation
- to begin with
- to initialize
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +