பெயர்ச்சொல்

தொகு

ஆஜானுபாகு

  1. அருகி வரும் வழக்கு. நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய தோற்றம்: காலாட்படை ஆட்கள் ஆஜானுபாகுவாக இருந்தார்கள்.
  2. மூலம் "ஆஜாநுபாஹு" என்ற வடமொழிச் சொல்.. சாமுத்ரிகா லட்சண சாஸ்திரப்படி ஓர் ஆண் மகனுடைய கைகள் அவனுடைய தோள்பட்டை முதல் கால்முட்டிகள் வரை இருத்தல் வேண்டும். அதையே இந்த வடமொழிச் சொற்கள் குறிப்பிடுகின்றன. இராமபிரான் இப்படி இருந்ததாக பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆஜானுபாகு&oldid=1203017" இலிருந்து மீள்விக்கப்பட்டது