ஆமணக்குநெய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Ricinus Communis--Oil ...(தாவரவியல் பெயர்)
மருத்துவ குணங்கள்
தொகு- சூட்டுக்குணமுள்ள ஆமணக்கு நெய்யை முறைப்படிக் குடித்தால் பேதியாகும்...இதனால் கோரவாதம், குன்மம், குடலேற்றம், உடம்பு ,கண், மூக்கு, காது, வாய் இவைகளிலுண்டாகும் எரிச்சலும் போகும்...பொன்னிறமும், தாது விருத்தியும் உண்டாகும்...
பயன்படுத்தும் முறை
தொகு- பெரியவர்களுக்கு ஒரு அவுன்சு அளவு சிறிது பசுவின் பால் சேர்த்தாவது அல்லது இஞ்சி சுரசம் சேர்த்தாவது கொடுத்தால் நான்கு ஐந்து முறை பேதியாகும்...
- குழந்தைகளின் வயதுக்கேற்றவாறு இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு ஆமணக்குநெய்யை முலைப்பாலிலாவது,பசுவின் பாலிலாவதுக் கலந்துக்கொடுத்தால் உபத்திரவம் இல்லாமல் பேதியாவதுடன் அக்கினிமந்தம், வயிற்றுவலி, வாயு சம்பந்தமான நோய்களை நீக்கும்...
- மேலும் இது பிரசவித்தப் பெண்களுக்கும், மூலரோகிகளுக்கும், சீதபேதியுடையவர்களுக்கும் பேதி மருந்தாகக் கொடுப்பதற்குச் சிறந்தது.
- ஆனால் இதையே வழக்கமாக வைத்துக்கொள்ளக்கூடாது..'அவசரமாக எப்போது தேவையோ அப்போது மட்டும் இவ்வாறு உபயோகப்படுத்துவதே சிறந்தது
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆமணக்குநெய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி