ஆரைக்கீரை

ஆரைக்கீரை
ஆரைக்கீரை
*Marsilea Quadrifolia...(தாவரவியல் பெயர்) 
பொருள்
  • ஓர் உண்ணும் கீரைவகை
  • செங்குத்தாக வளர்ந்து தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர்த்தாவரம்.
  • தமிழகமெங்கும் நீர்நிலைகளிலும் வாய்க்கால்களிலும்தானே வளரும் கொடி வகையாகும்.
வேறுபெயர்கள்
  • ஆலக்கீரை.
  • ஆராக்கீரை.

மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

  • european water clover

விளக்கம்

தொகு

குணம்: நீராரைக் கீரை என்றும் அழைக்கப்படும் இந்தக்கீரை நல்லச் சுவையும், நான்கிதழ்களும்கொண்டது... பித்தநோய், அதிமூத்திரம், இரத்தப் பிரமேகம் தாய்ப்பால் சுரப்பை நிறுத்துதல் ஆகியப் பிணிகளைப் போக்கும்...

உபயோகிக்கும் முறை: இந்தக் கீரையைத் துவட்டலாகச் செய்து சாதத்தோடுக் கலந்து உண்பர்...இது நாவிற்கு உருசியாக இருக்கும்...மேற்கண்ட நோய்களுக்கும் இன்றியமையாத தாகும்...

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆரைக்கீரை&oldid=1969588" இலிருந்து மீள்விக்கப்பட்டது