தமிழ்
தமிழ்
|
---|
பொருள்
- தமிழ், பெயர்ச்சொல்.
- இனிமை (பிங். )
- நீர்மை (பிங். )
- இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகையாக வழங்கும் மொழி
- தமிழ் இலக்கியம், தமிழ் நூல்
- தமிழர்
- தமிழ்நாடு
- தமிழர்களால் பேசப்படும் மொழி.
- கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழியாகக் கருதப்படுகிறது.
- சிந்து சமவெளி (Indic) சமவெளி நாகரிகத்தில் இம்மொழி இருந்திருக்கிறது என்று அகழ்வாராய்ச்சிகள் உறுதிசெய்துள்ளன.
- க ச ட த ப ற - வல்லினம், ங ஞ ந ம ன ண - மெல்லினம், ய ர ல வ ழ ள - இடையினம் என அழகு பெறுவதும் குறிப்பிடத்தக்கது
சிறப்புப் பெயர்கள்
- தமிழ் என்ற பொதுவான பெயர் இருந்தாலும் பல காரணங்களுக்காக ஏற்பட்ட பிற பெயர்கள்.
- அகத்தியம்: ஆதி சிவன் பெற்றெடுத்து அகத்திய முனிவரால் வளர்க்கப்பட்டு, பரப்பப்பட்டதால் அகத்தியம் என்று பெயர்.
- பொதிகை மொழி: பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்பட்டதால் பொதிகை மொழி என்று பெயர்.
- தென் மொழி: மிகப் பண்டைய காலத்தில் பாரதத்தின் வடக்கில் வழக்கிலிருந்த மொழி வடமொழி (சமசுகிருதம்) எனப்பட்டபோது, தெற்கில் வழக்கிலிருந்த தமிழ், தென் மொழி எனப்பட்டது.
- திராவிடம்: வடமொழியில் தமிழ் மொழியை திராவிட பாஷா என்றே அழைத்தனர்.
தமிழின் மற்ற சிறப்புகள்
- உலகிலேயே மிகவும் பழமையான, வளமிக்க உயர்தனிச் செம்மொழிகள் என்று போற்றப்படும் ஐந்து மொழிகளுள் ஒன்று தமிழ்...மற்ற மொழிகள்..கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் மற்றும் இப்ரு...
- திராவிடமொழிக் குடும்பத்தில் தாய்மொழியாகப் பேசும் மக்களின் எண்ணிக்கையில் தெலுங்கிற்கு அடுத்த இரண்டாவது இடத்திலுள்ளது...தொன்மையிலும், இலக்கிய, இலக்கண வளத்திலும் திராவிடமொழிக் குடும்பத்தில் தமிழுக்கே முதலிடம்...
- இந்திய அரசால் செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்.
- இந்தியாவில் அரசியல் சாசனப்படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுள் ஒன்று..தமிழ்.
- இந்தியாவில் தமிழ்நாட்டின் ஒரே ஆட்சி மொழியாகவும், புதுச்சேரி, அந்தமான் ஆகிய நடுவண் பிரதேசங்களில் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது...
- இந்தியாவைத் தவிர, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக உள்ளது...இலங்கையில் சிங்களத்தோடு தேசிய மொழியாகவும் உள்ளது... மேலும் மலேசியா, மோரீசு, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினர் மொழியாகத் திகழ்கிறது...
சொல்லாடல்
- • "தமிழை "உயர்தனிச் செம்மொழி" என்பர் அறிஞர்
- • "நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்தான்" - கம்பன்
- • "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்"
- • "தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
- • “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி”
- • "தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்"
- • "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே..."
- • "வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!"
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- sweetness, melodiousness
- refined quality
- Tamil language, being divided into iyaṟ-ṟamiḻ, icai-t-tamiḻ, nāṭaka-t-tamiḻ
- Tamil literature, Tamil work
- The Tamils
- The Tamil country
- பிரான்சியம்
- எசுப்பானியம்
- tamil (தமில்)
- இடாய்ச்சு
- வங்காளம்
- உருசியம்
- Тамильский (தமீல்ஷ்கீ)
- ஆர்மேனியன்
- மண்டரின் சீனம்
- அரபிக்
- ஹீப்ரூ
- தெலுங்கு
- తమిళము (தமிளமு)
- கன்னடம்
- ತಮಿಳು (தமிளு)
- மலையாளம்
- തമിഴ് (தமிழ்)
- மராத்தி
- இந்தி
- तमिल(தமில்)
- சமஸ்கிருதம்
- तमिज़् (தமிழ்) புதியதாக உருவாக்கப்பட்ட ழ சமஸ்கிருத எழுத்து ज़
- இணையான சமஸ்கிருத சொல் ருதம் (ऋतम्)
தமிழ் மொழி
|
|
- தமிழ் - தமிழகம், தமிழ்நாடு, தமிழர், தமிழன், தமிழினம், தமிழம் - தமிழாராய்ச்சி
- தமிழ்மொழி, தமிழ்த்தாத்தா, தமிழன்னை, தமிழீழம்
- தமிழிசை
- முத்தமிழ், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
- செந்தமிழ், கொடுந்தமிழ், தனித்தமிழ்
- எழுத்துத்தமிழ், பேச்சுத்தமிழ்
- நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ், கோவைத்தமிழ், சென்னைத்தமிழ்
- இலங்கைத்தமிழ், மலேசியத்தமிழ், சிங்கைத்தமிழ்
- இயல் - இசை - நாடகம் - பைந்தமிழ் - வல்லினம் - மெல்லினம் - இடையினம் - குறில் - நெடில் - உயிர் - மெய் - ஆய்தம் - தொல்காப்பியம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +