ஆற்றுப்படை
பெயர்ச்சொல்
தொகுஆற்றுப்படை
- ஆற்றுப்படுத்துதல் = வழிப்படுத்துதல்
- 96 பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
- பயனர் இடைமுகத்தில் ஒரு கூறு.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - guide
- ஆங்கிலம் - navigation
பயன்பாடு
தொகு- ஆற்றுப்படை என்பது, ஒரு வள்ளலிடம் பரிசில் பெற்றுத்திரும்பும் ஒரு புலவன், எதிர்ப்பட்ட வேறொரு புலவனை, தான் பரிசில் பெற்ற தலைவனின் இயல்பு, கொடை முதலியவற்றைக் கூறி அவனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துவது ஆகும். கரிகாற்பெருவளத்தானின் சிறப்புகளை 248 அடிகளில் விவரிக்கும் நூல் பொருநராற்றுப்படை. கரிகாலனிடம் பரிசில் பெற்றுத்திரும்பும் பொருநன் ஒருவன், பரிசில் நாடிவரும் பிரிதொரு பொருநனை கரிகால்பெருவளத்தானிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறான். (பாடினியின் வடிவழகு, தமிழ்மணி, 24 ஜூலை 2011)