இகல்
உரிச்சொல்
தொகுஇகல்
- வலிமை. இலைப்பொலிதா ரிகல்வேந்தன் (பு. வெ. 4, 14, கொளு).(பெ)
- மாறுபடுதல். இன்னகாலையி னெல்லைமைந்த னிகன்று (சேதுபு. சேது வந்த. 12).(வி)
- போட்டிபோடுதல். கோதைசுண்ணமாலை யோடிகலித்தோற்றாள் (சீவக. 904). (வி)
- ஒத்தல். குலிகமொ டிகலிய வங்கை (நன். 268, மயிலை.).(வி)
- திருக்குறளில் 'இகல்வேந்தன்' என வலிமை பொருந்திய மன்னனை வள்ளுவர் குறிக்கிறார்.(வி)
- பகை. (திருமுரு. 132.) (பெ)
- போர். இகன்மிகநவின்று (பரி பா. 6, 28).(பெ)
- சிக்கு. ஞானபாதப் பொருளி னிகலறுத்து (சி. போ. பா. மங்கல. 1).(பெ)
- அளவு. இகலிரிகடங்கண்டால் (ஞானா. 50, 5).(பெ)
- புலவி. இகலினிகந்தாளை (பரிபா. 9, 36).(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- strong(பெ)
- ஆங்கிலம்- To disagree, hate, be inimical.(வி)
- ஆங்கிலம்- To vie, compete.(வி)
- ஆங்கிலம்- To be similar.(வி)
- ஆங்கிலம்- Enmity, hatred, hostility. (பெ)
- ஆங்கிலம்- Battle, war. (பெ)
- ஆங்கிலம்- Puissance, strength, intrepidity (பெ)
- ஆங்கிலம்- Intricacy, obscurity, involvedness. (பெ)
- ஆங்கிலம்- Limit, bound. (பெ)
- ஆங்கிலம்- Amatorial strifes between husband and wife. (பெ)
- போர்
- சிக்கல்
- அளவு
- ஒப்பு
- மூட்டு