ஈறு
பொருள்
- எயிறு, பல்நிற்கும் தசை.
- கடைசி, முடிவு
- உப்பளம்
- தகாதமொழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- 1.Gum (Tooth)
- 2. last, end
- 3. salt-pan
- 4. inappropriate expression
விளக்கம்
தொகு- கடைசி என்பது அடிப்பொருள்.
- உப்பளம் என்னும் சொல்லும், நீர் வற்றியபின் கடைசியாய் எஞ்சி இருக்கும் வெண்மையான உப்பு நிற்பதால் உப்பளம்.
- தகாதமொழி என்பதும் எல்லை மீறும்நிலையில் கூறும் ஒவ்வாத மொழி.
- ஈறிலி என்பது கடவுளுக்கு ஒரு பெயர். எல்லையில்லாதவர் (எல்லையில்லா ஒன்று).
அடிச்சான்று
தொகு- கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974