எள்
எள்
- Sesamum Indicum..(தாவரவியல் பெயர்)
பொருள்
- வறட்சியான பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரு சிறிய செடியும் அதன் விதையும். இதில் கறுப்பு, வெள்ளை, செந்நிறம் கொண்ட விதைகளைத் தரும் வெவ்வேறு வகைகள் உண்டு. அறிவியல் பெயர் (இலத்தீன்) செசாமம் இண்டிக்கம் (Sesamum indicum). நல்லெண்ணெய் இதன் (எள்ளின) விதைகளைப் பிழிந்து எடுக்கப்படுவது. எள்நெய் = எண்ணெய்.
எள்ளின் குணங்கள்
- எள் பத்தியத்திற்கு உதவாது...சூடு, பலம், கபம், காச நோய், பித்த நோய் இவைகளை வருவிக்கும்...குரலின் ஒலியைக் கெடுக்கும்...பெண்களின் வயிற்றில் சிக்கிய இரத்தத்தை வெளிப்படுத்தும்...
- வீசம்படி எள்ளை மண் சட்டியில் கால் படி நீர் விட்டு ஓர் இரவு ஊறவத்து மறு நாள் நீரை வடிக்கட்டி வைத்துக்கொண்டு வேளைக்கு ஒன்று/இரண்டு அவுன்ஸ் வீதம் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் சீனிக் கலந்துச் சாப்பிட்டால் மாதவிலக்கை உண்டாக்கும்...இது மாதவிலக்கு சரியாக ஆகாதவர்களுக்கே ஆகையால் மாதவிலக்கம் வரும் நாளையறிந்து உட்கொள்ளல் நல்லது...சூதகச் சிக்கலை உடைக்கும் 'எள்ளு லேகியம் தயாரித்து வைத்துக்கொண்டும் பயன்படுத்துவர்...
மொழிபெயர்ப்புகள்