ஒலிப்பு

பொருள்

ககனம்(பெ)

  1. ஆகாயம், வானம்
  2. சொர்க்கம்
  3. காடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sky
  2. heaven
பயன்பாடு
  • நிலவு - ஆண்பாலா பெண்பாலா விவாதம் தொடங்கியது. விசுவநாத அண்ணன் கண்ணதாசன் அவர்களிடம் அண்ணே! 'குலமகள் ராதை" படத்தில் நீங்களே ஒரு பாட்டு எழுதியிருக்கீங்க. "பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்; அவன், இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்’னு! என்று ஆரம்பம் செய்தார். கண்ணதாசன் மெல்ல நகைத்துவிட்டு அடேய்! அந்தப் படத்துல வர்ற கதாநாயகன் பேரு சந்திரன்! நான் குறிப்பிட்டது - ககனத்துச் சந்திரனையல்ல; கதாநாயகன் சந்திரனை!" (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 28-செப்டம்பர்-2011)
  • "காரென்று பேர் படைத்தாய் ககனத்துரும் போது" - காளமேகப் புலவர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ககனம்&oldid=1961635" இலிருந்து மீள்விக்கப்பட்டது