தமிழ்தொகு

 
கடுகு:
கடுகு விதை--Mustard seeds
 
கடுகு:
குன்றிமணி--Crab's eye
ஒலிப்பு
(கோப்பு)

பொருள்தொகு

 • கடுகு, பெயர்ச்சொல்.
 1. செடி வகை (பதார்த்த. 1039.)
 2. கடுகு விதை
 3. குன்றி (மலை.)
 4. எண்ணெய்க்கசடு (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்தொகு

 • ஆங்கிலம்
 1. indian mustard---Brassica juncea...(தாவரவியல் பெயர்))--இதர கடுகு இனங்கள்
 2. mustard seed---sinapis Juncea...(தாவரவியல் பெயர்))--சமையலுக்குப் பயன்படும் சிறுகடுகு
 3. crab's eye---Abrus precatorius...(தாவரவியல் பெயர்))
 4. Lees of oil
 • தெலுங்கு
 1. ఆవాలు
 • இந்தி
 1. .राई

விளக்கம்தொகு

 • பொதுவாக கடுகு சமையலில் தாளிதம் செய்யப் பயன்படும்... இதனால் உணவுக்கு ஒருவித மணம் ஏற்படுவதோடு விரைவில் செரிமானமும் உண்டாகும்... மிகப் பிரசித்தி பெற்ற ஆந்திர ஊறுகாய் 'ஆவக்காய்'யில் கலக்கப்படும் முக்கியமான உட்பொருள் கடுகுப்பொடியாகும்...சமையலுக்குப் பயன்படும் கடுகு சிறுகடுகு என்று குறிப்பிடப்பட்டு கருப்பு, பழுப்பு நிறங்களில் சிறிய

மற்றும் சற்று குண்டான தோற்றத்தில் கிடைக்கிறது...இந்தக் கடுகு இனத்தில் வெண்கடுகு, நாய்க்கடுகு ஆகிய வகைகள் நாட்டு மருந்துத் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது...

மருத்துவ குணங்கள்தொகு

 • கடுகு அக்னிமந்தம், சோபம், வாதம், குழம்பிய உமிழ் நீர், கிரகணி, வயிற்றுவலி, திரிதோஷம் இவைகளை விலக்கும்...முறைப்படி உபயோகிக்க தலைமூளை, உள்ளுறுப்பு மாசுக்களையும், குண்டிக்காய், நீர்ப்பைகளின் கற்களையும் நீக்கும். இன்னும் அநேக நோய்களை நிவர்த்திக்கும் மகத்தான சக்தி கொண்டது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடுகு&oldid=1968423" இருந்து மீள்விக்கப்பட்டது