இஃதொரு பேச்சுத் தமிழ் சொல் மட்டுமே!...தமிழ் நாட்டில் பொதுவாக காபிக் கியாழத்துடன் (decoction) தேவைகேற்ப பாலும், சீனியும் சேர்த்துப் பருகுவர்...இருப்பினும் வெறும் காபிக் கியாழத்தை மட்டுமே பருகும் வழக்கம் பலருக்கு உண்டு...மேநாட்டார் பலருக்கும் இம்மாதிரியான காபிதான் பிடிக்கும்...அதன் இலேசான கசப்புச் சுவையே அலாதியானதுதான்!!...இதையே கட்டைக் காபி என்பர்...ஆடை அணியாத மனித உடல் அம்மணக் கட்டை ஆனதுபோல,ஆடை போன்ற பாலும் சீனியுமில்லாத காபி கட்டைக் காபி ஆனது