கருப்பூரவள்ளி

கருப்பூரவள்ளி
கருப்பூரவள்ளி
கருப்பூரவள்ளி
கருப்பூரவள்ளி

தமிழ்

தொகு
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

கருப்பூரவள்ளி

பொருள்

தொகு
  1. ஒரு மூலிகைச்செடி
  2. கற்பூரவல்லி

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. Coleus aromaticus
  2. Kapurli plant

விளக்கம்

தொகு
  • இஃதொரு மருத்துவ மூலிகைச் செடியாகும்...இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது... வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும்.. இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்... கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்டவை... இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது...

மருத்துவ குணங்கள்

தொகு
  • கருப்பூரவள்ளியினால் காசம் என்கிற பொடியிருமல், அம்மைக்கொப்பளம், சிலேஷ்மதோஷம், புறநீர்க்கோவை, ரூட்சை, மார்புச்சளி, வாதக்கடுப்பு ஆகிய இவைகள் நீங்கும்...

உபயோகிக்கும் முறை

தொகு
  • இதன் இலைச்சாற்றைக் குழந்தைகளுக்கு கால் முதல் அரைத் தேக்கரண்டியளவு முலைப்பாலோடு சேர்த்துக் கலக்கிக் கொடுக்கலாம்...பெரியவர்களுக்கு கால் முதல் அரை அவுன்சு வீதம் சிறிது சர்க்கரையுடன் சேர்த்துக்கொடுக்கலாம்...இது சீதளத்தினாலுண்டான கபத்தைக் கண்டிக்கும்...வியர்வையை உண்டாக்கி உடம்பின் கொதிப்பைத் தணியச்செய்யும்...இத்துடன் நல்ல கஸ்தூரி மாத்திரை, கொரோசனைமாத்திரை சேர்த்துக்கொடுத்தல் மிகவும் நல்லது...


( மொழிகள் )

சான்றுகள் ---கருப்பூரவள்ளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருப்பூரவள்ளி&oldid=1921178" இலிருந்து மீள்விக்கப்பட்டது