கழகம்
பொருள்
கழகம்(பெ)
- ஓலக்கம்
- கழகமேறேல் நம்பீ (திவ். திரு வாய். 6, 2, 6)
- கழ் + அகம் = கழகம்
- புலவர் கூடிய சபை. திவா.
- கல்விபயிலும் இடம்
- கந்தனை யனையவர் கலைதெரி கழகம் (கம்பரா. நாட்டுப். 48)
- படை மல் முதலியன பயிலும் இடம் திவா.
- சூதாடும் இடம்
- கழகத்துக் காலை புகின் (குறள், 937)
- சூது
- கழகத் தியலும் (பு. வெ. 12, வென் றிப். 16)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Assembly
- Assembly of poets
- Public place of learning, college
- Place for practising the use of arms; place for wrestling; boxing hall; gymnasium
- Place of gambling
- gambling